Home  |  அறுசுவை

ஃப்ரூட் கேசரி ருசியாக செய்யலாம் !!

ஃப்ரூட் கேசரி ருசியாக செய்யலாம் !!

தேவையானவை :              

 
ரவை – 1 டம்ளர்,
சர்க்கரை – 2 டம்ளர்,
நெய் – அரை டம்ளர்.
கேசரி பவுடர் – அரை டீஸ்பூன்,
ஏலக்காய் – 2,
முந்திரி – 5,
ஆப்பிள் – சிறியது ,
அன்னாசி – சிறியது 
பேரீச்சம் பழம் – 3,
பச்சை திராட்சை – 6,
ட்ரை ஃப்ரூட்ஸ் – ஒரு ஸ்பூன்,
பாதாம் எசன்ஸ் – சில துளிகள்
 
செய்முறை :
 
1.ஆப்பிள், அன்னாசி, பேரீச்சம் பழம் ஆகிய மூன்றையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
2.ஒரு ஸ்பூன் நெய்யில் முந்திரியை போட்டு வறுக்கவும்.அதே நெய்யில் எல்லா பழ துண்டுகளையும், உலர்ந்த பழங்களையும் சேர்த்து வறுத்து எடுக்கவும்.
3.ரவையை ஒரு ஸ்பூன் நெய் விட்டு, வறுத்து எடுக்கவும்.
4.ஒரு பாத்திரத்தில் இரண்டரை டம்ள்ர் தண்ணீர் விட்டு, கேசரி பவுடர் போட்டு அடுப்பில் வைக்கவும்.
5.தண்ணீர் நன்கு கொதிக்கும் போது, ரவையை கொட்டி கட்டியில்லாமல் கிளறவும்.
6.ரவை வெந்ததும், சர்க்கரையை சிறுது சிறிதாக சேர்த்து, கட்டியின்றி கிளறவும்.
7.கேசரி கெட்டியாக வரும் போது, நெய், பொடி செய்த  ஏலக்காய், எசன்ஸ், பழ துண்டுகள், முந்திரி ஆகியவற்றை போட்டு கிளறவும்.பின் இறக்கவும்

 

 
  23 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!