Home  |  அறுசுவை

ருசிக்க - மீன் குழம்பு - சுவையோ சுவை !!

ருசிக்க - மீன் குழம்பு - சுவையோ சுவை !!

நம் நாட்டில் சாப்பிட எராளமான சாப்பாட்டு வகைகள் வந்துவிட்டன, ஆனாலும் மீன் சமச்சு சாபிட்டாதான் நாக்கின் சுவையே அடங்கும்.


மீனை சமைக்க தேவையான பொருட்கள் -

பெரிய வெங்காயம் – ½ கப்
சிறிய வெங்காயம் – ½ கப்

 

காய்ந்த மிளகாய் – 4
மல்லிதூள் – 1 டே.ஸ்பூன்

 

ஜீரகம் – 1 டீ.ஸ்பூன்
மிளகு – ½ டீ.ஸ்பூன்

 


தக்காளி -1
தேங்காய் துருவல்- 2 மே.கரண்டி

 

மஞ்சள் தூள் – ½ டீ.ஸ்பூன்
½ கிலோ மீனுக்கு
புளி – 1 எலுமிச்சை பழம் அளவு

 

மீனை நன்றாக சுத்தம் செய்த பிறகு

 


மஞ்சள் தூள் – ½ டீ.ஸ்பூன்
சாம்பார் தூள் – 1 டி. ஸ்பூன்
உப்பு- 1 டீ.ஸ்பூன் சேர்த்து

 

அறை மணி நேரம் ஊற வைக்கவும்.இது போல் செய்தால் மீனின் பச்சை வாசனை குழம்பில் ஏறாது.மீனும் நல்ல சுவையுடன் இருக்கும்.

பிறகு -

 

நல்லெண்ணை – 2 மே.கரண்டி

பூண்டு – 5 பல்
கடுகு, வெந்தயம் – ¼ டி. ஸ்பூன்

 

வெங்காயம் - சிறிதளவு
கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய்

 

இவற்றையெல்லாம் தயார் செய்த பிறகு -


முதலில் வெங்காயம், சீரகமிளகு மிளகாயை லேசாக வதக்கவும்.

பின் அடுப்பை அணைத்து மல்லிதூள், தக்காளி, தேங்காய் மற்றும் சாம்பார் தூளை(சிறிது) சேர்த்து,ஆறியவுடன் அரைத்துகொள்ளவும் .


பின் ஒரு கடாயில் நல்லெண்ணை விட்டு, கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளிக்கவும்.

பின் வெங்காயம் , பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.

பின் அரைத்த விழுதை போட்டு , உப்பு சேர்க்கவும்.
தேவையான அளவு தண்ணீர் விட்டு ,


நன்றாக கொதி வரும் பொழுது
புளி தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போகும் வரை சமைக்கவும்.


பிறகு மீனை சேர்த்து 5 நிமிடம் மிதமான சூட்டில் வேகவிடவும் .
பிறகு இறக்கி கொத்துமல்லி தலை தூவி
தலை வாழை இட்டு பரிமாறவும் கமகம மீன் குழம்பு சுட சுட ரெடி .............


குறிப்பு:

மீன் குழம்பு செய்யும் பொழுது, அகலமான கடாயில் செய்யவும். மீன் உடையாமல் இருக்கும்.

அதிமாக கிளற கூடாது.

மீன் குழம்பை செய்தவுடன் உள்ள ருசியைவிட சிறிது நேரம் கழித்தால் நன்கு சுவை கூடியிருக்கும்.

கெளங்கா, சங்கரா, மத்தி, ஷீலா, வஞ்சரம், வவ்வால் மீன் முதலிய மீன்கள் குழம்புக்கு சுவையாக இருக்கும்.

பெரிய வெங்காயம் பதில் முழுக்க முழுக்க சின்ன வெங்காயம் உபயோகித்தால் சுவை நன்றாக இருக்கும்.

மனக்க மனக்க மீன் குழம்பு ருசியான சமையல் சாப்பிட ரெடி ...........

  28 Jul 2015
User Comments
27 Feb 2015 09:41:30 raja said :
சூப்பர்
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!