Home  |  திரை உலகம்

முன்ன ஐஸ்வர்யா.. இப்ப அனுஷ்க்கா.. இது பவர் ஸ்டாரின் புதிய திட்டம்...

முன்ன ஐஸ்வர்யா.. இப்ப அனுஷ்க்கா.. இது பவர் ஸ்டாரின் புதிய திட்டம்...

முன்பெல்லாம் ஐஸ்வர்யா ராயுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என சுத்திக்கொண்டிருந்த நம்ம பவர் ஸ்டார்..  தற்போது கவனத்தை அனுஷ்கா பக்கம் திருப்பி விட்டாராம்.  

இதற்கு காரணம் சூப்பர் ஸ்டாருடன் லிங்காவில் அனுஷ்கா ஜோடி போட்டதுதான். எந்திரனில் சூப்பர் ஸ்டாருடன் ஐஸ்வர்யா நடித்த போது தனக்கு ஜோடியாக ஐஸ்வர்யா நடிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டவர் தற்போது தனது ஆசையை அனுஷ்கா பக்கம் திருப்ப காரணம் சூப்பர் ஸ்டார்தானாம். அஜீத், விஜய் எல்லாம் பவர்ஸ்டாரின் நண்பர்களாம்.! அதனால் அவர்களுடன் போட்டி போட ஆசைப்படவில்லை என்று கூறும் பவர், தன்னுடைய ஒரே லட்சியம் சூப்பர் ஸ்டாரின் இடத்தை அடைவதுதான் என்கிறார். அவரது பேட்டியை கொஞ்சம் சிரிக்காமல் படியுங்க பாஸ்..

திகார் ஜெயில் எனக்கு ஆசிரமம் மாதிரிதான் தெரிஞ்சது. ஜெயிலுக்கு உள்ளே இருக்கிறவங்க எல்லாரும் குற்றவாளிகளும் இல்லை; வெளியே சுத்திட்டு இருக்கிறவங்க எல்லாரும் நிரபராதிகளும் இல்லை.

ஷங்கர் சார்கூட 'ஐ'. அப்புறம் 'சீனி', 'கெடா பூசாரி', 'ஜெயிக்கிற குதிரை', 'அரசியல்ல இது எல்லாம் சகஜமப்பா'னு ஏகப்பட்ட படங்கள் எனக்கு இருக்கு. 2015... என் ரசிகர்களுக்கு செம வேட்டை காத்திட்டு இருக்கு.
 
இப்ப வரைக்கும் அனுஷ்காவை போட்டோவுல மட்டும்தான் பார்த்துட்டு இருக்கேன். என் கால்ஷீட் ஃப்ரீயா இருந்தா, நிச்சயம் அனுஷ்காகூட நடிச்சே தீருவேன்.

ஐ படத்தில என் நடிப்புக்கு செம தீனி போட்டிருக்காரு ஷங்கர் சார். விக்ரம்கூட, 'என்ன பவரு... செம பவர்ஃபுல்லா பண்றீங்களே'னு மெர்சலாகிட்டார்.

நான் யாருடனும் இணைந்த நடிக்க தயார். பவர், சோலார்... சேர்ந்து நடிக்கிற அளவுக்கு ஆழமான ஸ்க்ரிப்ட் கிடைக்குமா?' என்று சவால் விட்டிருக்கிறார் பவர். 

  17 Dec 2014
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்