Home  |  திரை உலகம்

FeTNA வின் குறும்பட போட்டி !!

திரைப் படைப்பாளிகள் தங்கள் கருத்துக்களைகலைத் திறனை அழகிய வடிவில் வழங்கிட குறும்படங்கள் பயன்படுகின்றன.
கடந்த சில வருடங்களாக தமிழில் பல நல்ல குறும்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அப்படி வெளிவரும் நல்ல திரைப்படங்களை அனைவருக்கும் அறிமுகப்படுத்தவும்தமிழர் வாழ்வை உயர்த்தும் படங்களை ஊக்குவிக்கவும் அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை முதல் முறையாக ஒரு குறும்படப் போட்டியை நடத்துகிறது.

ஆர்வமுள்ள குறும் பட இயக்குனர்கள் செய்யவேண்டியது:

இந்த இணைப்பில் பதிவு செய்தபிறகு குறும்படத்தை கீழ்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
http://www.fetna2014.com/entry-forms/short-film-contest-entry.html

Thulir Software Technologies, 
No.368, Padmavathy Street, 
Srinivasa Nagar, 
Madipakkam, Chennai 600091. 
Tamilnadu, INDIA

தமிழர் வாழ்வியலை / சமூக சூழலைப் பேசுகின்ற சிறந்த 10 குறும் படங்களை உலகம் முழுவதிலும் இருந்து தெரிவு செய்து விருது மற்றும் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்பட்ட குறும்படங்களில் முதல் இடம் பிடிக்கும் இரு படங்களுக்கு 500 அமெரிக்க டாலர்கள் பரிசளிக்கப்படும்.
இரண்டாவது இடத்துக்கு மூன்று படங்கள் தேர்வு செய்யப்பட்டு தலா 200 டாலர்கள் வழங்கப்படும்.
மூன்றாவது பரிசுக்கு படங்கள் தேர்வு செய்யப்படும். பரிசு தலா 100 டாலர்கள்.

இந்தப் படங்கள் வரும் ஜூலை மாதம் செயின்ட் லூயிசில் நடக்கவிருக்கும் பெட்னா தமிழ் விழாவில் திரையிடப்படும். விழாவில் நேரில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்கள் சொந்த செலவில் வரலாம்.
போட்டிக்கான நுழைவுக் கட்டணம் ஏதுமில்லை.

மேலதிக விவரங்களுக்கு:
shortfilmcontest@fetna.org shortfilmcontest@fetna.org 
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்