Home  |  ஆன்மிகம்

குல தெய்வ வழிபாடு - பங்குனி உத்திரம் !!

குல தெய்வ வழிபாடு - பங்குனி உத்திரம் !!


குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்து கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்றும் செய்து விடமுடியாது என்பது ஐதீகம் மேலும் வரும் வினைகள் யாவுமே நல்வினையாக மாறும்.

 

குல தெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. குல தெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் எப்படிப்பட்ட மகானை வைத்து வழிபட்டாலும் அந்த வீட்டில் விமோசனம் கிடைப்பதில்லை என்கிறார்கள்.

 

பாரம்பரிய வழக்கத்தை மீறாமல், மாற்றாமல் வணங்கவேண்டியது முக்கியம். குல தெய்வம் என்னவென்று தெரியாதவர்கள் காலபைரவர் சந்நதியில் வியாழக்கிழமை அன்று குருஓரையின் போது அர்ச்சனை செய்து தனக்கு குல தெய்வத்தை காட்டும்படி வேண்டலாம். அர்ச்சனை முடிந்தவுடன் பசுவிற்கு அகத்திக்கீரையை உணவாகக் கொடுக்கலாம்.


நம் தெய்வங்களை வழிபட மரபுகள் உள்ளன. பெருங்கோயில்களுக்கு போவது போன்று நினைத்த நாளில் சென்று வழிபட வாய்ப்புகள் குறைவு. காரணம் பல குல தெய்வ கோயில்களில் நித்திய பூஜை இருப்பதில்லை,


கோயில்களும் மலை, ஆறு, குளம், கண்மாய், காடு போன்ற இடங்களில்தான் இருக்கும். அதற்கு சரியான போக்குவரத்து இருக்காது. இந்த குல தெய்வ வழிபாட்டை கார்த்திகை மாதம் திருகார்த்திகையின் போதும்.

பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்றும் மேற்கொள்ளச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

இதில் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் சிறப்புக்குரியதாகும். அன்று பௌர்ணமி என்பதால் உகந்த நாளாகவும் அமைகிறது.

அவரவர் குல தெய்வ கோவிலில்  நல்லெண்ணெய் தீபமிட்டு வழிபட்டால் கோடி நன்மை தரும் .

  26 Mar 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!