Home  |  நாட்டு நடப்பு

கண்மூடித்தனமான காதல் முகநூலால் வந்த வேதனை !!

கண்மூடித்தனமான காதல் முகநூலால் வந்த வேதனை !!

பேஸ்புக் மூலம் காதலித்தவரை தேடி ஐந்தாயிரம் கிலோ மீட்டர்களை கடந்து சென்ற இளம்பெண் மாயமானதைப் பற்றி அமெரிக்க போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

face book செய்யும் சோதனைகள் ஏராளம் அதில் இதோ இந்த செய்தி ஒரு அலங்கோலம். அமெரிக்க நாட்டின் கனெக்ட்டிகட் எனும் மாநிலத்தில் வசிப்பவர் ரெபேக்கா ஆத்தர் 17 வயது பெண். இவர் பேஸ்புக் மூலம் மொரோக்கோவில் வசித்து வரும் சிமி எல் அடாலா என்பவருக்கு அறிமுகமாகியுள்ளார். முதலில் நட்பாக பழகி வந்தவர்கள் தீவிரமாக காதலிக்க ஆரம்பித்து விட்டனர்.

தன் காதலியை நேரில் சந்திக்க நினைத்த அடாலா மொராக்கோ தனது நாட்டுக்கு வரவழைக்க டிக்கெட் எடுத்து அனுப்பியுள்ளார். தன் காதலனை சந்திக்கும் மகிழ்ச்சியில் ரெபேக்கா தனது வீட்டில் சொல்லாமல் மொராக்கோவுக்கு புறப்பட்டுச் சென்றார்.

கடந்த ஜூலை மாதம் 7-ம் தேதி மொராக்கோ சென்ற மகள் எங்கே போனார்? என்ன ஆனார் என்பது பற்றி தகவல் தெரியாத அவளின் தாயார் போலீசாரிடம் ரெபேக்கா காணாமல் போனதாக புகார் அளித்துள்ளார்.

இதனால், அமெரிக்க போலீசாருக்கு அடாலா மீது சந்தேகம் எழும்பியுள்ளது. அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் அவரே ரெபேக்காவை கடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

இந்த பெண்ணை கண்டறியும் முயற்சியில் அமெரிக்க மத்திய போலீசார் மற்றும் சிறப்பு போலீசார் இறங்கியுள்ளனர்.
யாரையும் யாரும் நம்பி போகவேண்டாம் இது எல்லோருக்கும் நல்ல பாடம்.

  10 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?