Home  |  ஆரோக்கியம்

கண்ணே கண்ணே தினமும் என்னை கவனி !!

கண்ணே கண்ணே தினமும் என்னை கவனி !!


ஒவ்வொரு மனிதனின் செயல் பாடும் கண்களில் இருந்தே தொடங்குகிறது .
எனவே கண்களை சிறிது கவனிப்போம் .


முதலில் நிமிர்ந்து நேராக உட்கார வேண்டும்.
வலது கையில் கட்டை விரலைத் தவிர மற்ற விரல்களை மடக்கி வைத்துக் கொண்டு
பார்வைக்கு நேரே உயர்த்தி கட்டைவிரலைப் பார்க்க வேண்டும்.

 

நம் கூறிய பார்வை நமது கட்டை விரலில் நிலைத்திருக்க வேண்டும்.
கையை மெதுவாக வலப்புறம் நகர்த்த வேண்டும். கையை நகர்த்தும்போது, விழிகள் மட்டும் கையோடு சேர்ந்து நகர வேண்டும்.

 

எக்காரணத்தை கொண்டும் தலையைத் திருப்பக் கூடாது. கழுத்து, முதுகு, நேராக இருப்பது அவசியம். கட்டை விரலைத் தெளிவாகப் பார்க்கக்கூடிய தூரம் வரை மட்டுமே நமது கையை நகர்த்தவும்.

 

சிறிது நேரம் அப்படியே வைத்திருக்கவும். பிறகு, கையை அப்படியே பழைய நிலைக்குக் கொண்டுவரவும்.
இவ்வாறு ஆரம்பத்தில் ஐந்து முறை செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.

 

பயிற்சி செய்யும்போது, கண்களை அசைக்கவோ சிமிட்டவோ கூடாது. இதேபோல கை பெருவிரலை இடது பக்கம் நகர்த்தி செய்ய வேண்டும்.


நேராக உட்கார்ந்து, மூக்கின் நுனியை உற்று நோக்கவும். கண்களோ, தலையோ வலிப்பது போன்று இருந்தால், கொஞ்சம் ஓய்வு எடுத்துவிட்டுத் தொடரலாம். பிறகு, கண்களை மூடி சிறிது ஓய்வெடுக்கவும்.

 

நிமிர்ந்து உட்கார்ந்து கண்களை 10 முதல் 20 முறை சிமிட்டவும். பிறகு, கண்களைத் திறந்து நேராகப் பார்க்கவும். இடது கண் விழியை வலது பக்கமும், வலது கண் விழியை இடது பக்கமும் கொண்டுவந்து சிறிது பயிற்சி செய்யவும். அதன் பிறகு கைகளை தேய்த்து கண்களில் வைத்துக்கொள்ளவும். மீண்டும் 10- 20 முறை கண்களைச் சிமிட்டவும்.

 

இவ்வாறு செய்தால் கண்களுக்கு சிறிது ரெஸ்ட் கொடுத்தார் போல் இருக்கும் .
கண்கள் நலமாக இருக்க முருங்கை கீரை தினமும் உணவில் சேர்க்க வேண்டும் .

 

  07 Apr 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!