Home  |  திரை உலகம்

எதிர் நீச்சல் ( Ethir Neechal )

எதிர் நீச்சல் ( Ethir Neechal )

Movie Name: Ethir Neechal எதிர் நீச்சல்
Hero: SIVA KARTHIKEYAN
Heroine: Priya Anand
Year: 2013
Movie Director: R.S.Durai Senthilkumar
Movie Producer: Wunderbar Films
Music By: Anirudh Ravichander


பல வருடங்களாக குழந்தை இல்லாமல் பிறக்கும் சிவகார்த்திகேயனுக்கு அவரது அம்மா சுகபிரசவம் நடந்தால் குலதெய்வத்தில் பெயரை வைப்பதாக வேண்டிக்கொள்கிறார். அதன்படி அவருக்கு “குஞ்சிதபாதசாமி” என்று பெயர் வைக்கிறார்கள். அந்த பெயரால் வீடு, பள்ளி, கல்லூரி, நண்பர்கள் என எல்லா இடங்களில் கிண்டலடிக்கப்படுகிறார் சிவகார்த்திகேயன். இந்த பெயரரை மாற்றிவிடவேண்டியதுதான் என்று முடிவெடுக்கும்போது அவரது குடம்பத்தில் ஏதாவது அபசகுணங்கள் ஏற்படுகிறது. ‌அதனால் அந்த பெயரை மாற்றாமல் இருந்து விடுகிறார்.

கடைசியில் காதலுக்கே இந்த பெயர் பிரச்சனையாகவரும் போது மனம் நொடிந்துபோகிறார் நாயகன். ஒரு நியூமராலாஜியை (மனோபாலா) சந்தித்து தன்னுடைய பெயரை “‘ஹாரீஸ்“ என்று மாற்றிக்கொள்வது மட்டுமில்லாமல் தன்னுடை வீடு, வேலை, ஏரியா என அத்தனையையும் மாற்றி ஹாரீஸாக மாறுகிறார். இங்குதான் பள்ளி ஆசிரியராக வரும் நாயகி ப்ரியா ஆனந்தை சந்தித்து காதலாகிறது. இப்படி சுபமாக போகும் காதலில் நாயகிக்கு சிவகார்த்திகேயன் தன்னுடைய பெயரை மறைத்தது தெரியவர அதை எப்படி சமாளிக்கிறார்? படம் முழுக்க நகைச்சுவை கலந்திருக்கிறது. இடைவேளை வரை அவருடைய பெயரால் அவர்படும் அவஸ்தைகளை ரசிக்கும்படியாக படமாக்கியிருப்பது நன்று.

சிவகார்த்திகேயன் மிகக்குறைந்த காலத்தில் வளர்ந்திருப்பது பராட்டுதலுக்குரியது. அவரது நடிப்பு ஒரு வித்தியாசமான பாணி. காதலியின் பின்னால் சுற்றும்போதும், காதலை சொல்லும்போதும், காதலை வளர்க்கும்போதும் அந்த காதலில் ஜெயிக்க அவர் முயற்சிக்கும்போதும் அசத்தல் என்று சொல்லலாம். பாடல்கள் அத்தனையும் அழகாக வந்திருக்கிறது. நாயகி ப்ரியா ஆனந்த அழகான நடிப்பால் அசத்தியிருக்கிறார். மற்றொறு வலிமையான கதாபாத்திரத்தில் நந்திதாவும் அழகாக நடித்திருக்கிறார்கள். சிவகார்த்திகேயனுக்கு நண்பராகவரும் (சதீஷ்) டெய்லர் இருவரும் செர்ந்து செய்யும் அட்டகாசம் திரையரங்கில் சிரிப்பலை.

இடைவேளை வரை நகைச்சுவையாக நகரும் கதை பிற்பாதியில் தன்னுடைய பெயரை பிரபலபடுத்த சிவகார்த்திகேயன் சென்னை மராத்தான் போட்டியில் கலந்துக்கொள்கிறார். அந்த போட்டியில் இரை வெற்றியடைசெய்ய கோச்சாக இருப்பவர் நந்திதா. படத்தில் இடைவேளை முடிந்ததும் ஆட்டத்துக்குவருகிறார் தனுஷ். பெயரில் என்ன இருக்கிறது. நம்முடைய முயற்சியும் வெற்றிகளுமே ஒரு பெயரை அடையாளப்படுத்தும். நமக்கும் பெற்றோர்கள் வைக்கும் பெயர் என்பது சாதாரணமானது அல்ல அது ஒரு பரம்பரையில் அடையாளம், அது ஒரு வம்சத்தில் ஞாபகம் என்று நியாயப்படுத்தி படத்தை முடிக்கிறார் இயக்குனர் துரை செந்தில் குமார்.

 

  16 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்