Home  |  அறுசுவை

இறால் குழம்பு

தேவையானவை :

 

இறால் - அரை கிலோ

சின்ன வெங்காயம் - 50 கிராம்

மல்லித்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - ஒரு டீ ஸ்பூன்

உப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்

எண்ணை - 3 டேபிள் ஸ்பூன்

பூண்டு - 3 பல்

தக்காளி - 3

மிளகாய்த்தூள் - 2 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - 3 கொத்து

தேங்காய்த் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்

சீரகம் - 1/4 டீ ஸ்பூன் 

சோம்பு - ஒரு டீ ஸ்பூன்

 

செய்முறை :

 

1.ஒரு பாத்திரத்தில் இறாலை சுத்தம் செய்து 1/2 டேபிள் ஸ்பூன் உப்பு போட்டு பிசறி 10 நிமிடம் வைத்து பிறகு மூன்று முறை தண்ணீர் விட்டு நான்கு கழுவி எடுக்கவும்.

 

2.தேங்காய் மற்றும் சீரகத்தை மிக்ஸ்சியில் அரைக்கவும்.வெங்காயத்தை இரண்டிரண்டாகவும், தக்காளியை நான்காகவும் நறுக்கவும்.சோம்பை நன்றாக தட்டி வைக்கவும்.

 

3.புளியை ஒரு கிளாஸ் தண்ணீரில் கரைத்து புளி தண்ணீரை எடுத்து வைக்கவும்.அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை ஊற்றி சோம்பு தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி இறாலை சேர்க்கவும்.இறால் நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.பின் தக்காளி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி புளி தண்ணீரை ஊற்றவும்.5 நிமிடம் கழித்து தேங்காய் ஊற்றி மேலும் 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். 

Shrimp Curry

Ingredients for Shrimp Curry:

 

Shrimp-1/2 Kg

Small Onion-50 G

Coriander Powder-1 Tbsp

Turmeric Powder-1 Tsp

Salt-1 1/2 Tbsp

Oil-3 Tbsp

Garlic-3 Flakes

Tomato-3

Chilly Powder-2 Tbsp

Curry Leaves-3 Bunch

Grated Coconut-3 Tbsp

Cumin-1/4 Tsp

Fennel-1 Tsp

 

Procedure to make Shrimp Curry:

 

1. In a vessel, mix washed shrimp along with 1/2 table spoon of salt and let 10 minutes and then wash in water very finely.

2. Grind coconut and cumin finely. Cut the onion into 2 and tomatoes into 4. Mash the fennel well.

3. Mix the tamarind in water and extract the juice. Heat oil in a pan, add fennel and let to splutter. Then add onion, curry leaves and saute for a while and then add shrimp. Then add turmeric powder, chilly powder, coriander powder, salt and fry well. Then add tomatoes and tamarind juice. After 5 minutes add coconut paste and let 5 minutes to boil and remove from flame.

 

 

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!