Home  |  திரை உலகம்

என்னமோ ஏதோ திரைவிமர்சனம் !!

நடிகர் : கெளதம் கார்த்திக்


நடிகை : ராகுல் ப்ரீத்தி சிங், நிகிஷா பட்டேல்


இயக்குனர் : ரவி தியாகராஜன்


இசை : டி.இமான்


தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அலா மொத-லை-யிந்தி என்ற படத்தின் தமிழ் ரீமேக் தான் என்னமோ ஏதோ.


படம் ஆரம்பிக்கும் போது கதாநாயகன் கவுதம் கார்த்திக் கடத்தப்படுகிறார். 


கடத்துவது யார் தெரியுமா நம்ம இளைய திலகம் பிரபுதான்.


கடத்தி செல்லும் போது வழியில் கௌதமிடம் உன்னைப் பற்றி சொல் என்று கேட்கிறார் பிரபு. அதிலிருந்து ஆரம்பிக்கிறது பிளாஸ்பேக்.


சென்னையில் வசதியான் குடும்பத்தில் பிறந்த கவுதம் கார்த்திக், சிம்ரன் என்ற பெண்ணைக் காதலிக்கிறார். ஆனால் அந்த காதல் கைகூடாமல் போகிறது. 


அந்தப் பெண்ணுக்கு டாக்டர் ஒருவருடன் ஐதராபாத்தில் திருமணம் நடக்கிறது. 


இதற்காக ஐதராபாத் போகும் கவுதமின் கண்ணில், அதே கல்யாணத்தில் மணப்பையனாக தன் காதலனைத் தொலைத்த ராகுல் ப்ரீத்சிங் படுகிறார். இருவரும் சந்தித்து நண்பர்களாகின்றனர். 


இந்த நட்பு கவுதமின் மனதில் மீண்டும் காதலை ஏற்படுத்துகிறது. தன் காதலை சொல்ல முயற்சி செய்யும் போது, ராகுல் ப்ரீத் ஒருவரை அறிமுகம் செய்து வைத்து இவரை திருமணம் செய்யப்போவதாக கூறுகிறார். இதனால் மனவேதனை அடைகிறார் கௌதம். அதன் பிறகு நிகிஷா படேலின் நட்பு கௌதமிற்கு கிடைக்கிறது. இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். 


இதற்கிடையில் ராகுல் ப்ரீத் திருமணம் செய்யபவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட, கௌதம் மீது காதல் வயப்பட்டு அவரை தேடி வருகிறார். இறுதியில் கௌதம் கார்த்திக் யாருடன் ஜோடி சேர்ந்தார்? 


கவுதம் கார்த்திக்கை எதற்காக பிரபு கடத்தினார்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.


கௌதம் கார்த்திக் தனது துறுதுறு நடிப்பி மூலம் படம் முழுக்க சாக்லேட் பாயாக வலம் வருகிறார். நடன காட்சிகளில் நன்றாக அசத்துகிறார். ஆனால் படக் காட்சிகளில் இன்னும் முன்னேற்றம் தேவை. 


நாயகிகளாக வரும் ராகுல் பிரீத்சிங், நிகிஷா பட்டேல் ஆகியோர் தங்களது வேலையை கனக்கச்சிதமாக செய்துள்ளனர்.


டி.இமானின் இசையில் செட் அப் யுவர் மவுத்..., நீ என்ன பெரிய அப்பா டக்கரா... உள்ளிட்ட பாடல்கள் தான் படத்தின் பெரும்பலம்!


மொத்தத்தில் என்னமோ ஏதோ.....  ஏதோ இருக்கு....... 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்