Home  |  திரை உலகம்

என்னாச்சு ( Ennachu )

என்னாச்சு ( Ennachu )

Movie Name: Ennachu என்னாச்சு
Hero: Mohammed Ismail
Heroine: RENUKA MENON
Year: 2013
Movie Director: Sri Mani
Movie Producer: Smile Production
Music By: Sai Kartheek


சித்தார்த், ரோகித், ஜீவா என மூவரும் நண்பர்கள். ஜீவாவின் திருமணத்திற்காக நண்பர்களும் தோழிகளும் கேரளாவுக்கு வருகிறார்கள். அங்கு ஜீவாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. இதற்கிடையில் ஒரு கூட்டம் கொடைக்கானலில் உள்ள ஒரு மரகத சிலையை அடைய திட்டம் திட்டுகிறது. இத்திட்டத்தில் பங்கெடுத்த ரோகித், பணத்திற்காக அந்த சிலையை எடுத்து வர சம்மதிக்கிறான். ஜீவாவின் நிச்சயதார்த்ததிற்குப் பிறகு நண்பர்கள் அனைவரும் சுற்றுலா செல்ல முடிவு எடுக்கிறார்கள். பொதுவாக நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு மாப்பிள்ளையை வெளியூருக்கு அனுப்புவதில்லை. ஆனால் அதையும் மீறி திருமணத்திற்கு நான்கு நாட்கள் உள்ள நிலையில் அனைவரையும் சுற்றுலா அழைத்து செல்ல ரோகித் திட்டம் தீட்டுகிறான். முதலில் ஜீவாவின் பெற்றோர் அதை மறுக்கிறார்கள். பின்னர் நண்பர்களின் மகிழ்ச்சிக்காக அனுமதிக்கிறார்கள். இதனால் சித்தார்த், ரோகித், ஜீவா, யாழினி, மற்றும் அவள் தோழி ஆகியோர் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கிறார்கள். அங்கு ஒரு நாள் இரவில் காட்டுக்குள் தங்குகிறார்கள். ரோகித் தனியாக காட்டுக்குள் செல்கிறான். அதைப் பார்த்த சித்தார்த், மற்றவருடன் அவனை பின் தொடர்ந்து தேடுகிறார்கள்.


ரோகித் தான் தேடிவந்த மரகத சிலையை அடைந்து அதை எடுக்க முற்படுகிறான். இதை பார்த்த நண்பர்கள் ஏன் அந்த சிலையை எடுக்கிறாய்? என்று கேட்க, அதை எடுக்கத்தான் நான் சுற்றுலாவுக்கே ஏற்பாடு செய்தேன் என்று கூறுகிறான். இதனால் அதிர்ந்து போன நண்பர்கள், இதை எடுக்க வேண்டாம் என்று சொல்ல, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அங்கு திடீரென்று வந்த காட்டுவாசிகள், இவர்களிடம் சண்டை போட்டு அந்த சிலையை எடுத்து சென்று விடுகின்றனர். இறுதியில் ரோகித் தனது திட்டப்படி மரகத சிலையை கைப்பற்றினானா, நண்பர்கள் அனைவரும் காட்டுக்குள் இருந்து வெளியேறினார்களா ஜீவாவின் திருமணம் நடந்ததா, என்பதே கதையின் ஓட்டம்.
நடிப்பில் எல்லோரும் கவனம் செலுத்தியிருக்கலாம் , எதுமே சரியில்லை. நடிகைகளுக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. இசைக்கும் காட்சி பின்னணிக்கும் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம். குறும்பட பாணியிலேயே செல்கிறது.....இந்த குறும்படம்.
பாவம்...... தயாரிப்பாளர்.

  18 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் அடுத்தப்படமும் இதே ஸ்டைல் தான்
கமலின் கருவிழி பிதுங்குகிறதா..?? நிகழ்ச்சி தொடங்கி அடுத்த நாளே வெளியானது, விஜய் டிவி “பிக் பாஸ்’ ஷோவ
இது எல்லாமே விஜய் ரசிகர்களால் தான்- மனம் நெகிழும் பிரபலம்
'தல 58' படத்தின் இயக்குனர் இவர்தான் உறுதியான தகவல்!
விஜய்-முருகதாஸ் படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளரா?
சர்வைவா பாடலை கேட்ட அஜித் என்ன சொன்னார் தெரியுமா- யோகி.பி தகவல்
அஜித் ரசிகர்களே அடுத்த அதிரடிக்கு தயாரா- ஒரு ஸ்பெஷல் தகவல்
ஜுலை 1ம் தேதிக்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கும் விஜய் ரசிகர்கள்- அப்படி என்ன ஸ்பெஷல்
அஜித்தின் விவேகம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஸ்பெஷல் விஷயம்
அடங்கப்பா..! – பிக் பாஸ் நிகழ்ச்சியில் இத்தனை கண்டிஷன்களா?