Home  |  திரை உலகம்

என்றென்றும் புன்னகை ( Endrendrum Punnagai )

என்றென்றும் புன்னகை ( Endrendrum Punnagai )

Movie Name: Endrendrum Punnagai என்றென்றும் புன்னகை
Hero: JEEVA
Heroine: TRISHA
Year: 2013
Movie Director: I.AHMED
Movie Producer: RED GIANT MOVIES
Music By: HARRIS JAYARAJ

ஜீவா, சந்தானம், வினய். திருமணம் தங்கள் நட்புப் பாலத்தை உடைத்துவிடும் என்பதால், திருமணமே வேண்டாம் என்பதில் தீர்மானமாக இருக்கிறார்கள் நண்பர்கள். ஆனால், நட்பு வாக்குறுதியை மீறி சந்தானமும் வினய்யும் திருமணம் முடிக்க, தனிமையில் தவிக்கிறார் ஜீவா. அப்போது தோள் கொடுக்கும் த்ரிஷாவின் நட்பு, மனசுக்குள் காதல். காதல் பூத்ததா? ஜீவா நண்பர்களுடன் சேர்ந்தாரா? என்பது மீதிக்கதை.எந்தப் பெண்ணையும் பிடிக்காத ஜீவா, எல்லாப் பெண்களையும் கலாய்க்கும் சந்தானம், எல்லாப் பெண்களையும் முயற்சிக்கும் வினய்... என வெரைட்டி கேரக்டர்கள் பிடித்து சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் அஹமத். ஆனாலும் த்ரிஷாவின் பரிதவிப்பு, ஆண்ட்ரியாவின் ஆளுமை, நண்பர்களின் திருமண அவஸ்தைகள் என கலகலப்பு.

ஈகோ இளைஞனாக ஜீவா....சர்வதேச மாடல் ஆண்ட்ரியாவை 'ஜஸ்ட் லைக் தட்’ அதட்டும் இடத்திலும், த்ரிஷாவை விமான சிநேகம் என்று அறிமுகப்படுத்தும் இடத்திலும் ஈகோ ஈட்டியை நச்செனப் பாய்ச்சுகிறார். ஆரம்பம் முதல் வெறுப்பு, கோபம், விரக்தி என்றே முகம் காட்டும் ஜீவா, வெளிநாட்டில் த்ரிஷா மேல் உண்டாகும் திடீர் பாசத்தை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறும் இடங்களில் சூப்பர்.நடப்பதையெல்லாம் அம்மா, தங்கையிடம் சொல்லும் மிடில் க்ளாஸ் பெண்ணாக த்ரிஷா. கனிவதும், பின் கோபத்தில் கடுகாக வெடிப்பதும் என இயல்பு.நண்பர்களில் ஒருவர் வினய். அவ்வளவே! மொத்தப் படத்தையும் தாங்கி நிற்பது சந்தானம். திமிரும்ஆண்ட்ரியா.முதல் பாதி ஜாலி, இரண்டாம் பாதி ஃபீலிங்ஸ்.மதியின் ஒளிப்பதிவு, ஜீவா வீட்டின் பால்கனி தாண்டி எட்டிப் பார்க்கும்போது அழகு, பிரியா... பிரியா’ பாடலில் மட்டும் ஹாரிஸ் தெரிகிறார்.

புன்னகை பூக்களை உதிர்த்துவிட்டு சென்றது....வலியுடன்.

 

  18 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
நாளை மெர்சல் இசை வெளியீடு... விஜய் பேசப் போகும் அரசியல் என்ன?
'விவேகம்' புயலை கண்டு பயந்து ஓடிய படங்கள்
மெர்சல் ரிலீசாகாது..!இப்படி ஒரு பிரச்சனையா!..
தளபதி ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- மெர்சல் ஸ்பெஷல்
'விவேகம்' ட்ரெய்லர்ல இதையெல்லாம் கவனிச்சீங்களா..? #VivegamTrailer
BiggBossல் இருந்து வெளியேறிய ஷக்தியின் முதல் பதிவு- இனி தான் என் ரியல் கேம் ஆரம்பம்
ஓவியாவை பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்ற இதுவே காரணம்..!
மெர்சல் படக்குழுவினர்களுக்கு விஜய் கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்
விவேகம் படத்தை பார்த்த பிறகு அஜித்தின் ரியாக்‌ஷன் இதுதான்
விஜய் படைத்த பிரமாண்ட சாதனை, தமிழகத்தில் தளபதி படம் மட்டுமே நிகழ்த்திய சாதனை