Home  |  திரை உலகம்

ஈகோ ( Ego)

ஈகோ ( Ego)

Movie Name: Ego ஈகோ
Hero: VELU
Heroine: Anuswara
Year: 2013
Movie Director: S.SAKTHIVEL
Music By: Kash Villanz


'கந்தக்கோட்டை' படத்தில் கோட்டை விட்ட சக்திவேல், விட்டதை பிடிக்கும் முயற்சிதான் இது.வழக்கமான பழைய ஃபார்முலா கதையை தான் எடுத்து அப்படியே எடுத்திருக்கிறார் இயக்குனர் சக்திவேல். ஹீரோ, ஹீரோயின் இருவரும் ரயிலில் சந்திக்கிறார்கள். முதல் சந்திப்பிலேயே முட்டல், மோதலில் ஆரம்பிக்கிறது கதை. தன் தங்கை குழந்தையின் காதுகுத்துக்கு பணம் கொண்டு செல்லும் ஹீரோ அந்த பணத்தை ரயிலில் தவற விட, தன் அம்மாவின் மோதிரத்தை கொண்டுவருபவன் தான் காதலன் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு, தன் காதலனை கைப்பிடிக்க வீட்டை விட்டு ஓடி வரும் ஹீரோயினும் மோதிரத்தை தொலைத்து விட, அந்த மோதிரம் நாயகன் கையில் சிக்க, அந்த மோதிரத்தால் ஏற்படும் விளைவுகளே கதை.

அந்த மோதிரத்தால் ஏற்படும் ஆள் மாறாட்டத்தை நகைச்சுவையுடன் சொல்ல முயற்சி செய்கிறார் இயக்குனர். ‘கலகலப்பு’ படத்துக்கு வசனம் எழுதிய கேபிள் சங்கர் தான் இந்த படத்துக்கும் வசனம் எழுதியிருக்கிறார். ஆனால் கலகலப்பு கூடவில்லையே. படத்தின் நாயகனாக வேலு, நாயகியாக அனஸ்வரா அறிமுகம். நாயகன் படம் முழுக்க காமெடியனோடு சேர்ந்தே பயணிக்கிறார். நாயகி அனஸ்வரா இரண்டவது பாதியில் மட்டுமே என்ட்ரி ஆகிறார். நாயகனின் நண்பனாக பாலசரவணன், ஒரே ஆறுதல், ஆனால் முயற்சி வீணாகிறது. நல்ல எதிர்காலம் பாலாவுக்கு. நாயகியின் அப்பா, அண்ணன்கள், அவர்கள் குடும்பம் என அனைவரையும் லூசாக காட்டி இருக்கிறார் இயக்குனர். படத்தில் பாடல்கள் இல்லாதது ஏன் என்று தெரியவில்லை. தங்கைக்கு பணம் கொடுக்க செல்லும் அண்ணன், அதை விட்டுவிட்டு கடைசியில் நாயகியை காதலித்து கரம் பிடித்து, முதலிரவில் படத்தை முடித்தல் கைவந்த கலைய???

நல்ல அண்ணன் போங்கப்பா....கல்யாணம்???!!!!

  18 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்