Home  |  திரை உலகம்

ஈகோ திரை விமர்சனம் !!

நடிகர் : வேலு

 

நடிகை : அனஸ்வரா

 

இயக்கம் : சக்திவேல்

 

இசை : தினா, காஷ் வில்லழ்

 

இன்றைய தமிழ் சினிமாவில் அதிகமாக காமெடி படங்கள் தான் அதிக ஹிட் ஆகின்றன. இதனை நன்றாக புரிந்து கொண்ட இயக்குனர் சக்திவேல், ஈகோ என்ற ஒரு ஜாலியான காமெடி படத்தை கொடுத்திருக்கிறார். 

 

படத்தில் ஹீரோ பெயர் ஈஸ்வர், ஹீரோயின் பெயர் கோமதி,  இருவரின் பெயரின் முதல் எழுத்தையும் எடுத்து ஈகோ என படத்தின் பெயராக்கி விட்டார்கள். மத்தபடி படத்தின் கதைக்கும், டைட்டிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

 

கதைப்படி தங்கைக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொண்டு ரயிலில் கிளம்புகிறான் நம்ப ஹீரோ ஈஸ்வர். “என் மோதிரத்தை கொண்டு வருபவன் என் காதலன் என்னை பெண் கேட்டு வருகிறான்” என்று எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறிவிடும் கோமதியும் அதே ரயிலில் பயணிக்கிறாள். ஆனால் கோமதியின் மோதிரமோ ஈஸ்வரிடம் மாட்டிக் கொள்ள அதைக் கொண்டு கொடுப்பதற்காக கோமதியின் ஊருக்குப் போகிறார் நம்ப ஹீரோ. போன இடத்தில் அவனை கோமதியின் காதலனாக நினைக்கும் கோமதியின் குடும்பம் என்ன செய்கிறது என்பதை கலகலப்பான காமெடியுடன் சொல்லி இருப்பதுதான் படத்தின் மீதி கதை. 

 

படத்தில் கதா நாயகனாக நடித்திருக்கும் வேலு புதுமுகம். பக்கத்து வீட்டு பையன் போன்று இருப்பதாலேயே படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே அவருடன் நாம் ஒட்டிப் போகிறோம். கதாநாயகியாக அனஸ்வரா. ஈஸ்வருடன் முட்டி மோதிக் கொள்ளும் காட்சிகளில் இயல்பாக நடித்திருக்கிறார்.

 

சந்தானம் நடிக்கும் படங்களில் எப்படி ஹீரோ டம்மியாக்கப்பட்டு சந்தானத்தை பெரிதுபடுத்திக் காட்டுவார்களோ அது போன்று இந்த படத்தில் பாலாவை ஹீரோ ரேஞ்சுக்கு வைத்து காமெடி பண்ணியிருக்கிறார்கள். படம் முழுக்க பாலாவின் ராஜ்யம்தான். படத்தில் எல்லோரும் பேசுவதை விட அதிகமான டயலாக் பேசியிருக்கிறார் பாலா. (ஒரு வேல பால அடுத்த சந்தனத்துக்கு ட்ரை பண்ணுவாரோ)

 

கந்தக் கோட்டை படத்தை இயக்கிய சக்திவேல். இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். படத்தை கலகலப்பு மாதிரி ரசிகர்களை சிரிக்க வைக்கணும்ங்கிற எண்ணத்தில் காட்சிகளை வசனங்களை எழுதியிருக்கிறார்கள். இவர்களது முயற்சி வீண் போகவில்லை. காட்சிக்கு காட்சி சிரிப்பதற்கான உத்திரவாதம்.

 

படத்தில் பின்னணி இசை, நாடகங்களுக்கு இசையமைப்பது போன்று உள்ளது. இரண்டு பாடல்கள் மட்டுமே இருப்பதால் ரசிகர்கள் தப்பித்தார்கள்.

 

படத்தில் வரும் டயலாக்குகள் அனைத்தும் ரசிகர்களை வேகுவாக சிரிக்க வைக்கின்றன.

 

மொத்தத்தில் ஈகோ - டிசம்பரில் ஒரு காமெடி கலாட்டா !!

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்