Home  |  அறுசுவை

முட்டை புலாவ் (Egg Pulao)

தேவையானவை :

 

பாசுமதி அரிசி - 2கப்

முட்டை - 3

நெய் - 4 ஸ்பூன்

தேங்காய் பால் - 1கப்

மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்

கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்

தக்காளி கூழ் - 1/2 கப்

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

கிராம்பு, ஏலக்காய், பட்டை - தலா 3

சின்ன வெங்காயம் - 1/2 கப் (பொடித்தது)

புதினா, கொத்தமல்லி தழைகள் - 1/2 கப் (பொடித்தது)

 

 

செய்முறை:-

 

1.ஒரு அடி கனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி அது சூடானதும் கிராம்பு, பட்டை, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.அதனுடன் 1மணி நேரம் ஊறவைத்த பாசுமதி அரிசியை சேர்க்கவும். அரிசியில் உள்ள நீர் வற்றும் வரை வதக்கவும்.இக்கலவையுடன் தேங்காய் பாலுடன் 1கப் தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். சாதம் உதிரிஉதிரியாக இருக்க வேண்டும்.

2.ஒரு பாத்திரத்தில் முட்டை மற்றும் உப்பு சேர்த்து லேசாக நுரை வரும் வரை அடித்து வைத்துக் கொள்ளவும்.வாணலியில் நெய் ஊற்றி வெங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.இதனுடன் புதினா, கொத்தமல்லி தழைகளைச் சேர்க்கவும். அதனுடன் முட்டை ஊற்றி சட்டென்று கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.இக்கலவையுடன் சாதத்தை சேர்த்து நன்கு கலந்து சூடாக பரிமாறவும்.

Egg Pulao

Ingredients for Egg Pulao:

 

Basmati Rice-2 Cup

Egg-3

Ghee-4 Tsp

Coconut Milk-1 Cup

Turmeric Powder-1/4 Tsp

Garam Masala-1 Tsp

Tomato Paste-1/2 Cup

Chilly Powder-1 Tsp

Cloves, Cardamom, Cinnamon-Each 3

Small Onion-1/2 Cup (Chopped)

Mint, Coriander Leaves-1/2 Cup

 

Procedure to make Egg Pulao:

 

1. In a wide deep pan, add ghee, cloves, cinnamon, cardamom and let to splutter. Then add 1 hour soaked basmati rice. Fry until the water gets dry. Then add coconut milk, 1 cup of water, salt ans allow to boil well.

2. In a vessel, add egg and salt and beat well. Heat oil in a pan, add onion, chilly powder, turmeric powder, garam masala and fry till the raw smell subsides. Then add mint and coriander leaves. Then pour egg and stir for a while and remove from flame. Finally add boiled rice, mix well and then serve it.

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!