Home  |  அறுசுவை

முட்டை கடலை குழம்பு(Egg Ground nut sauce)

தேவையானவை :

 

முட்டை  - 4 (வேக வைத்தது)

கொண்டைக்கடலை  - 100 கிராம் (வேக வைத்தது )

வெங்காயம் - ஒன்று (நறுக்கியது)

புளிக்கரைசல் - ஒரு கப்

உப்பு - தேவைக்கேற்ப

கடுகு, சோம்பு - தாளிக்க

எண்ணெய் - 2 டீஸ்பூன்

தக்காளி - ஒன்று (நறுக்கியது)

மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

 

செய்முறை :

 

1.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு தாளிக்கவும். பிறகு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி, உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.பின்பு வதங்கிய கலவையில் மிளகாய் தூள், தண்ணீர் மற்றும் புளிக்கரைசலை ஊற்றி உடனே வெந்த கொண்டைக்கடலை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

 

2.வேக வைத்த முட்டையை கத்தியால் நன்றாக கீறி விடவும். பிறகு அந்த முட்டைகளை கொதிக்கும் புளிக்கரைசலில் போடவும்.முட்டை குழம்புடன் நன்றாக கொதித்து வரும். பிறகு குழம்பு பதத்திற்கு வந்த உடன் சூடாக பரிமாறவும்.

Egg Ground Nut Sauce

Ingredients for Egg Ground Nut Sauce:

 

Egg-4 (Boiled)

Bengal Gram-100 G (Boiled)

Onion-1 (Chopped)

Tamarind-1 Cup

Salt-as Needed

Mustard, Fennel-for Seasoning

Oil-2 Tsp

Tomato-1 (Chopped)

Chilly Powder- 2 Tsp

Ginger Garlic Paste-1 Tsp

 

Procedure to make Egg Ground Nut Sauce:

 

1. Heat oil in a pan, add mustard, fennel and let to splutter. Then add ginger, garlic paste, onion, tomato, salt and saute well. Then add chilly powder, water and pour tamarind juice and then add boiled bengal gram and allow to boil.

2. Peel the boiled eggs. Then put the eggs in boiling tamarind mixure. Now eggs boiled with sauce. When comes thick consistency, remove from flame and serve it.

 

 

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!