Home  |  அறுசுவை

ஈஸி கொண்டைக்கடலை ( Easy kondai kadalai )

தேவையானவை:

 

 

கொண்டைக்கடலை - ஒரு கப்

 

உப்பு - தேவையான அளவு

 

கடுகு - தாளிப்பதற்கு

 

உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்

 

கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்

 

மிளகாய்வற்றல் - மூன்று

 

பச்சை மிளகாய் - மூன்று

 

துருவிய தேங்காய் - ஒரு கப்

 

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

 

துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்

 

கறிவேப்பிலை - சிறிதளவு

 

பூண்டு – ஒன்று

 

எண்ணெய் - தேவையான அளவு

 

 

செய்முறை:

 

 

1.முதலில் கொண்டைக்கடலையை 2 மணி நேரம் ஊற வைத்து எடுத்து வேக வைத்து தண்ணீரை வடிகட்டி வைத்துக் கொள்ளவும்

 

2.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து வதக்கவும்.

 

3.பிறகு நசுக்கிய பூண்டு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கி இஞ்சியையும் அதனுடன் சேர்க்கவும்.

 

4.பின்னர் இதில், வேக வைத்த கொண்டைக்கடலையை சேர்த்து வதக்கி விட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மூன்று வதக்கவும்.

 

5.வதங்கியவுடன் தேங்காய் துருவலை போட்டு ஒரு நிமிடம் கிளறி பரிமாறவும்.

  21 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!