Home  |  அறுசுவை

காய்ந்தகறிக் குழம்பு (Dry Meat Curry)

தேவையானவை :

 

உப்புக்கண்டம் - 100 கிராம்

கத்தரிக்காய் - 100 கிராம்

இஞ்சி,பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்

எண்ணை - 2 டேபிள் ஸ்பூன்

பட்டை, இலை - தாளிக்க

சின்ன வெங்காயம் - 50 கிராம்

தக்காளி - இரண்டு

மஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன்

 

 

அரைக்க தேவையானவை:

 

சோம்பு - ஒரு டீ ஸ்பூன்

தேங்காய்த் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்

வரமிளகாய் - 6

மல்லி விதை - 2 டேபிள் ஸ்பூன்

சீரகம் - ஒரு டீ ஸ்பூன்

 

 

செய்முறை :

 

1.முதலில் ஒரு பாத்திரத்தில் உப்புக்கண்டத்தை கழுவி தண்ணீரில் வேக வைக்கவும்.அரைக்க வைத்துள்ளவற்றை விழுதாக மிக்ஸ்சியில் அரைக்கவும்.கத்தரிக்காய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நறுக்கவும்.

2.அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணை ஊற்றி தாளிக்க வைத்துள்ளவற்றைப் போட்டு வாசனை வந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்.வதங்கியதும் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து நன்றாக பச்சை வாசனை போக வதக்கி மஞ்சள் பொடி, உப்பு, கத்தரிக்காய், தக்காளி சேர்த்து மூன்று நிமிடம் வதக்கி வேகவைத்த கறியை தண்ணீருடன் ஊற்றவும்.5 நிமிடம் கழித்து அரைத்த மசாலாவை ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து எண்ணை மேலே மிதந்ததும் இறக்கவும்.

Dry Meat Curry

Ingredients for Dry Meat Curry:

 

Uppukandam-100 G

Bringal-100 G

Ginger, Garlic Paste-1 Tbsp

Oil-2 Tbsp

Cinnamon, Bay leaf-for Tempering

Small Onion-50 G

Tomato-2

Turmeric powder-1 Tsp

 

Ingredients for Grinding:

 

Fennel-1 Tsp

Grated Coconut-3 Tbsp

Dry chilly-6

Corinader Seeds-2 Tbsp

Cumin-1 Tsp

 

Procedure to make Dry Meat Curry:

 

1. Take a vessel, wash the uppukandam in water and boil well. Grind the given ingredients very finely. Chop the brinjal, tomato and onion.

2. Heat oil in a pan, add seasoning ingredients and let to splutter and then add onion and saute well. Then add ginger, garlic paste and fry till the raw smell subsides. Then add turmeric powder, salt, brinjal and tomatoes. Fry for 3 minutes and add boiled meat along with water. After 5 minutes add ground paste and let to boil. When oil floats on top, remove from flame.

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!