Home  |  அறுசுவை

முருங்கைக்காய் குழம்பு.(Drumstick sauce)

தேவையானவை :

 

முருங்கைக்காய் - 2 (பெரிய துண்டுகளாக நறுக்கவும்)

சின்னவெங்காயம் - 1கப் (பொடித்தது)

கொத்தமல்லி இலை - சிறிது

சாம்பார் பொடி - 1 ஸ்பூன்

சீரகப் பொடி - 1/4 ஸ்பூன்

மஞ்சள் தூள் - சிறிதளவு

பெருங்காயம் - சிறிதளவு

புளித்தண்ணீர் - 1/2 கப்

கடுகு, உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்

பாசிப்பருப்பு - 1/4 கப் வேகவைத்தது

தக்காளி - 1/2 கப் (பொடித்தது)

பச்சைமிளகாய் - 2 (நீளவாக்கில் நறுக்கியது)

கறிவேப்பிலை - சிறிது

நல்லெண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

சோம்பு - 1/4 ஸ்பூன்

வெந்தயம் - 1/4 ஸ்பூன்

 

செய்முறை:

 

1.கடையில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பாதியளவு நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.வதக்கிய பின்பு ஆறவைத்து மிக்ஸில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

2.அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, சோம்பு, வெந்தயம், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுக்கவும்.அதனுடன் கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

பின்பு மீதி நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.

3.வதக்கிய பொருட்களை அனைத்தையும் குக்கரில் போட்டு அதனுடன் அரைத்த கலவை, முருங்கைக்காய், புளித்தண்ணீர், உப்பு, சிறிது நல்லெண்ணெய், சாம்பார் பொடி, சீரகபொடி, மஞ்சள் தூள், கொத்தமல்லி இலை,வேகவைத்த பருப்பு, தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் வரும் வரை வேகவிடவும்.

4.ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி குக்கரில் உள்ள குழம்பை அதில் ஊற்றி மேலாக கொத்தமல்லி இலையை தூவி மூடி வைக்கவும்.சுவையான மணமான முருங்கைக்காய் குழம்பு தயார்!

Drumstick Sauce

Ingredients for Drumstick Sauce:

  

Drumstick-2 (Chopped Big Pieces)

Small Onion-1 Cup(Chopped)

Coriander Leaves- Little

Sambar Powder-1 Tsp

Cumin Powder-1/4 Tsp

Turmeric Powder-Little

Asafoetida-Little

Tamarind Juice-1/2 Cup

Mustard, Black Gram-1 Tsp

Green Gram-1/4 Cup (Boiled)

Tomato1/2 Cup (Chopped)

Green Chilly-2 (Chopped Lengthwise)

Curry Leaves-Little

Sesame Oil-as Needed

Salt-as Needed

Water-as Needed

Fennel-1/4 Tsp

Fenugreek-1/4 Tsp

Procedure to make Drumstick Sauce:

 

1. Heat oil in a pan, add half quantity of given chopped onion and tomato and saute well. Allow to cool and grind them.

2. Heat oil in that same pan, add mustard and let to splutter and then add black gram, fennel, fenugreek, asafoetida and fry well. Then add curry leaves, green chilly and fry well. Now add remaining onion and saute them.

3. Put all the fried ingredients in a cooker, add grinded paste, drumstick, tamarind juice, salt, sesame oil, sambar powder, cumin powder, turmeric powder, coriander leaves, boiled dhal and water. Cover the cooker and allow 3 whistles to boil.

4. Put small amount of sesame oil in a vessel and pour the prepared sambar in it and garnish with coriander leaves. Tasty drumstick sauce is ready.

 

 

 

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!