Home  |  அறுசுவை

முருங்கைக்காய் குழம்பு (Drumstick Curry)

தேவையானவை :

 

முருங்கைக்காய் - 2 (பெரிய துண்டுகளாக நறுக்கியது)

சின்னவெங்காயம் - 1கப் (பொடித்தது)

தக்காளி - 1/2 கப் (பொடித்தது)

பச்சைமிளகாய் - 2 (நீளவாக்கில் நறுக்கியது)

சீரகப் பொடி - 1/4 ஸ்பூன்

மஞ்சள் தூள் - சிறிதளவு

பெருங்காயம் - சிறிதளவு

புளித்தண்ணீர் - 1/2கப்

வெந்தயம் - 1/4 ஸ்பூன்

நல்லெண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

கடுகு, உளுந்தம் பருப்பு - 1ஸ்பூன்

பாசிப்பருப்பு - 1/4 கப் வேகவைத்தது

சோம்பு - 1/4 ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

கொத்தமல்லி இலை - சிறிது

சாம்பார் பொடி - 1 ஸ்பூன்

 

செய்முறை:

 

1.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தது பாதியளவு நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.வதக்கிய பின்பு ஆறவைத்து மிக்ஸில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, சோம்பு, வெந்தயம், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுக்கவும்.அதனுடன் கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.பின்பு மீதி நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.

 

2.வதக்கிய மசாலா பொருட்களை அனைத்தையும் குக்கரில் போடவும். அதனுடன் அரைத்த கலவை, முருங்கைக்காய், புளித்தண்ணீர், உப்பு, சிறிது நல்லெண்ணெய், சாம்பார் பொடி, சீரகபொடி, மஞ்சள் தூள், கொத்தமல்லி இலை , வேகவைத்த பருப்பு, தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் வரும் வரை வேகவிடவும்.பின்பு ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி குக்கரில் உள்ள குழம்பை அதில் ஊற்றி மேலாக கொத்தமல்லி இலையை தூவி மூடி வைக்கவும்.

Drumstick Curry

Ingredients for Drumstick Curry:

 

Drumstick-2 (Chopped)

Small Onion-1 Cup(Chopped)

Tomato-1/2 Cup(Chopped)

Green Chilly-2(Chopped Vertically)

Cumin Seed-1/4 Tsp

Turmeric Powder-Little

Asafoetida-Little

Tamarind Juice-1/2 Cup

Fenugreek-1/4 Tsp

Sesame Oil-as Needed

Salt-as Needed

Water-as Needed

Mustard, Black Gram-1 Spoon

Green Gram-1/4 Cup(Boiled)

Fennel-1/4 Tsp

Curry Leaves-Little

Coriander Leaves-Little

Sambar Powder-1 Spoon

 

Procedure to make Drumstick Curry:

 

1. Heat oil in a pan, add half quantity of chopped onion and tomato and saute well. Then allow to cool and grind them very finely. Heat oil in a pan, add mustard, black gram, fennel, fenugreek, asafoetida and let to splutter. Then add curry leaves, green chilly and fry well. Then add the remaining onion and saute well.

2. Then transfer the all fried masala ingredients in a cooker. Then add the ground paste, drumstick, tamarind juice, salt, sesame oil, sambar powder, cumin powder, turmeric powder, coriander leaves, boiled dhal and water. Cover the cooker and allow 3 whistles to boil. Now pour the sesame oil in a vessel and add the sambar in it. Garnish with coriander leaves and cover the vessel.

 

 

 

 

 

 

 

 

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!