Home  |  அறுசுவை

டபுள் பீன்ஸ் கிரேவி (Double Beans Gravy)

தேவையானவை :

 

டபுள் பீன்ஸ் - 1 கப்

வெங்காயம் - 1

தக்காளி - 1

பூண்டு -5 பல்

பட்டை - 2

கிராம்பு -  2

ஏலக்காய் -  2

இஞ்சி - சிறிது

தனியாதூள்- 1/2 ஸ்பூன்

மஞ்சள்தூள்- 1/4 ஸ்பூன்

உப்பு- 1 ஸ்பூன்

கொத்தமல்லி - சிறிது

எண்ணெய் - 4 ஸ்பூன்

சோம்பு - 1/4ஸ்பூன்

சீரகம் - 1/4 ஸ்பூன்

மிளகாய்த்தூள்- 1 ஸ்பூன்

 

 

செய்முறை :

 

1.ஒரு குக்கரில் ஐந்து மணிநேரம் ஊறவைத்த டபுள் பீன்ஸ்,1/4 ஸ்பூன் உப்பு,தண்ணீர் சேர்த்து மூன்று விசில் விடவும்.வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை,கிராம்பு, ஏலக்காய்,சோம்பு,சீரகம் சேர்த்து வதக்கவும்.பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

 

2.வெங்காயம் நன்கு வதங்கியதும், சிறிதாக நறுக்கிய இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கவும்.பின் அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.தக்காளி வதங்கியதும் மிளகாய்த்தூள்,தனியாதூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மிளகாய்த்தூள் வாசனை போக்கும் வரை மிதமான தீயில் வதக்கவும்.பின் அடுப்பை அணைத்து மசாலாவை ஆறவிடவும்.

 

3.மசாலா நன்கு ஆறியதும் மிக்ஸ்யில் சிறிது தண்ணீர் சேர்த்து வதக்கிவைத்த மசாலாவை நன்றாக அரைக்கவும்.பாத்திரத்தில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்துவைத்த மசாலாவை சேர்த்து ஒரு கப் தண்ணீர்,வேகவைத்த டபுள் பீன்ஸ் சேர்த்து கொதிக்கவிடவும்.பத்து நிமிடம் கொதித்ததும் கொத்தமல்லி தூவி கிளறி சப்பாத்தி, தோசையுடன் பரிமாறவும்.

Double Beans Gravy

Ingredients for Double Beans Gravy : 


Double Beans - 1 Cup,

Onion - 1,

Tomato - 1, 

Garlic - 5 Cloves,

Cinnamon - 2, 

Cloves - 2,

Cardamom - 2,

Ginger - Little,

Coriander Powder - 1/2 Tsp,

Turmeric Powder - 1/4 Spoon,

Salt - as needed,

Coriander - Little,

Oil - 4 Spoons,

Aniseeds - 1/4 Spoon,

Cumin - 1/4 Spoon,

Chilli Powder - 1 Spoon.

 

Method to make Double Beans Gravy : 


1. In a Cooker add 5 hours soaked double beans, 1/4 tsp salt, water. And allow it to come 3 whistles. Heat oil in a frying pan then add cloves, cinnamon, cardamom, aniseeds, cumin and allow it to fry well. After it fried add the chopped onions along with them.

2. Then add finely chopped ginger, garlic and allow it to fry well. Then add tomato, chilli powder, coriander powder, turmeric powder and salt along with them. Then fry it well in a low flame. Then turn off the stove. Let it cooled.

3. After it get cooled grind the masala in a mixi. Heat oil in a frying pan then add the grinded masala and a cup of water then cooked double beans and allow it to boil for 10 minutes.  Finally add coriander leaves along with them. Turn off the stove now.


Double Beans Gravy is ready to serve. 

  08 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!