Home  |  ஆரோக்கியம்

நாய் கடித்தால் செய்ய வேண்டியது என்ன ? செய்யக் கூடாதது என்ன ?

உலகில் வெறிநாய்க்கடியால் இறப்பவர்களில் சுமார் 80 சதவீதம் பேர் இந்தியர்கள் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கு காரணம் வெறிநாய் கடி பற்றிய விழிப்புணர்வு இன்மையே என்பது வருத்ததிற்குரிய விஷயம். 


எல்லா நாய்க்கடியும் விஷம் கிடையாது. ரேபிஸ் கிருமியால் பாதிக்கப்பட்ட நாய் கடித்தால் மட்டுமே ஆபத்து. இது உயிருக்கே உலை வைக்கும் ஆபத்து நிறைந்தது. 


ரேபிஸ் நோய் குறித்த சில முக்கிய தகவல்கள் பின்வருமாறு,


ரேபிஸ் மனிதர்களுக்கு எவ்வாறு ஏற்படுகிறது?


வீட்டில் வளர்க்கும் நாய், சிறிய குட்டி நாய், தெருநாய் என எந்த நாய் கடித்தாலும் அதன் பற்கள் நம் உடம்பில் கீறலை ஏற்படுத்துகிறது. நாயின் வாயில் இருந்து சுரக்கும் உமிழ்நீர், அக்காயத்தின் வழியாக "ரேபிஸ்' எனப்படும் வெறிநோய் கிருமிகளை உள்ளே செலுத்துகிறது. அவை தோல் மற்றும் தசை திசுக்களில் பெருக்கமடைந்து மூளையை அடைந்து இறப்பை ஏற்படுத்துகின்றன. 


காயமடையும் இடத்தைப் பொறுத்து, ரேபிஸ் கிருமிகள் வேகமாக அல்லது மெதுவாக மூளையை சென்று அடையும். அப்போது நோயின் பாதிப்பு உடனே ஏற்படும். கால்கள் எனில் மெதுவாகவும், கைகளில் கடித்தால் வேகமாக மூளையைச் சென்று அடையும். 


வெறிநாய்கடி நேயின் அறிகுறிகள் :


இந்த நோயாளிகள் தண்ணீரைக் கண்டாலே பயந்து அலறுவார்கள். இதுதான் இந்த நோய்க்கு முக்கிய அறிகுறி. இவர்களுக்குத் தொண்டைச் சதைகள் சுருங்கிவிடுவதால் தண்ணீர் குடிக்கவோ, உணவு சாப்பிடவோ முடியாது. இன்னும் சொல்லப்போனால், இவர்கள் தண்ணீரைப் பார்த்தாலே தொண்டைச் சதைகள் இறுகி, சுவாசத்தை நிறுத்திவிடும். இதனால் உயிர் போவது போன்ற உணர்வு உண்டாகும். இதற்குப் பயந்துகொண்டு தண்ணீர் குடிக்க மாட்டார்கள். இதற்குத் ‘தண்ணீர் பயம்’ என்று பெயர். சுவாசிக்க சிரமப்படுவார்கள். வலிப்பு வரும். அதைத் தொடர்ந்து உயிருக்கு ஆபத்து வரும்.


நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும்?


முதலில் கடித்த இடத்தில் கிருமிகளின் எண்ணிக்கையை குறைக்கும் விதமாக நாய் கடிபட்ட இடத்தை உடனே சோப்பு நீரால் பலமுறை நன்கு கழுவ வேண்டும். வேகமாக விழுகிற குழாய்த் நீரை திறந்துவிட்டு 5 நிமிடங்கள், நன்கு ரத்தம் வெளியேறும்வரை கழுவுவது இன்னும் நல்லது.


காயம் ஆழமாக இருந்தால் காயத்தை நன்கு விலக்கிச் சுத்தப்படுத்த வேண்டும்.


காயத்தின் மீது டெட்டால் அல்லது ஸ்பிரிட் தடவ வேண்டும்.


தாமதிக்காமல் மருத்துவரிடம் சென்று, முறையான சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். 


கடித்தது சாதாரண நாயா, வெறிநாயா என பார்த்துத்தான் தடுப்பூசி போட வேண்டுமா?


கடித்தது வெறிநாயாக இருந்தாலும், சாதாரண நாயாக இருந்தாலும் முதலில் தடுப்பூசியை கண்டிப்பாக போட வேண்டும். ஏனெனில் நாம் வளர்க்கும் சாதாரண நாய், குட்டிநாய்க்கு வெறிநோய் (ரேபிஸ்) தாக்கம் இருப்பது நமக்கு தெரிய வாய்ப்பில்லை.

 

என்ன செய்யக்கூடாது?


நாய் கடித்த இடத்தில் கட்டுப் போடக்கூடாது. சூரிய ஒளியில் இந்த வைரஸ் கிருமிகள் இறந்துவிடும் என்பதால் காயத்தை மூடாமல் வைத்திருப்பது நல்லது. 


திறந்த காயமென்றாலும், ஆழமான காயமென்றாலும் கட்டு போட்டு மூடக்கூடாது.


நாய் கடித்த இடத்தில் சுண்ணாம்பு, சந்தனம், சாம்பல், பச்சிலைச்சாறு போன்றவற்றைத் தடவக் கூடாது. அப்படித் தடவினால் கிருமிகள் உடலை விட்டு வெளியேறுவது தடைபடும்.


நாய் கடியின் வகைகள் :


வகை 1 : நாயை தொடுதல், காயம் படாமல் தோலை நக்குதல்


மருத்துவம் : தேவையில்லை


வகை 2 : சிராய்ப்பு காயம்,கவ்வுதல்,குறைவான அளவில் ரத்தக்கசிவு


மருத்துவம் : காயத்திற்கு முதலுதவி + ரேபிஸ் நோய்த்தடுப்பு ஊசி


வகை 3 : ஏற்கனவே உள்ள காயத்தை நக்குதல்,ஒன்றுக்கு மேற்பட்ட ஆழமான காயங்கள், நரி, ஓநாய், வவ்வால் கடி


மருத்துவம்: காயத்திற்கு முதலுதவி + ரேபிஸ் நோய்த்தடுப்பு ஊசி+ இம்முயுனோக்லோபின் தடுப்பு மருந்து


ஊசிகள் :


1. டிடி ஊசி - இது எந்த விலங்கு கடித்தாலும் போடவேண்டியது


2. ரேபிஸ் ஊசி- அரசு மருத்துவமனையில் இது இலவசமாக் போடப்படும் (தனியாரில் ரூ 350-500 வரை ஆகும்) 


3. இம்யுனொக்லொபின் -அதிகமான அளவில் உள்ள காயதிற்கு கட்டாயம் போட வேண்டும்.இதுவும் இலவசமாக கிடைக்கும் .


ஒருமுறை தடுப்பூசி போட வேண்டுமா அல்லது தொடர்ந்து போட வேண்டுமா?


நாய்க்கடித்த சிறிது நேரத்திலேயே தடுப்பூசி போட்டுவிட வேண்டும். இதை "0' நாள் என்பர். பின் 3வது நாள், 7வது நாள், 14வது நாள், 28வது நாள் என, 5 தடவை தடுப்பூசி போட வேண்டும். 


தடுப்பூசி போடுவதற்கு முன்னும், பின்னும் கடிபட்ட இடத்தை ஆல்கஹால் அல்லது டிங்சர் வைத்து சுத்தம் செய்யக் கூடாது. ஏனெனில், அது, தடுப்பூசியில் உள்ள ரேபிஸ் எதிர்ப்பு கிருமிகளை அழித்துவிடும்.


நாய் கடித்தவுடன் அந்த நாயை 10 நாட்களுக்கு நம் கண்காணிப்பில் வைத்துக் கொள்ள வேண்டுமா?


கடித்தது வெறிநாயாக இருந்தால் 10 நாட்களில் வெறி நோய்க்கான அறிகுறிகள் தென்படும். எஜமானரின் கட்டளைக்கு நாய் கீழ்ப்படியாது. கண்ணில் பார்க்கும் அனைத்து உயிரற்ற பொருட்களையும் கடித்தல், வழக்கத்துக்கு மாறாக குரல் எழுப்புதல், உணவு எடுத்துக் கொள்ளாமை, தண்ணீரைப் பார்த்தால் ஒவ்வாமை, அதிக உமிழ்நீர் சுரத்தல், தாடை தொங்கி விடுதல், தண்ணீரை விழுங்க முடியாமல் போவது, பின்கால்களில் தளர்ச்சி போன்ற அறிகுறிகள் அந்த நாய்க்கு, கடித்த 10 நாட்களில் ஏற்பட்டால் வெறிநோய் தாக்கப்பட்டு இருப்பது நிச்சயம். 


இதற்காக 10 நாட்களுக்கு காத்திராமல், கடித்த அன்றே தடுப்பூசி போட அரம்பித்துவிட வேண்டும். முதல் தடுப்பூசி மட்டும் போட்டுவிட்டு, நாம் தடுப்பூசி போட்டுவிட்டோம் என நிறுத்திவிடக் கூடாது. நாய் கடித்தவுடன் வெறிநோய் தடுப்பூசிபோடுவது மட்டுமே உயிரை காக்கும்.


நாய்க்குத் தடுப்பூசி:


வீட்டில் நாய் வளர்ப்போர் நாய்க்குட்டிக்கு இரண்டு மாதம் முடிந்ததும் ஒரு தடுப்பூசி, மூன்று மாதம் முடிந்ததும் ஒரு தடுப்பூசி போட்டுவிட வேண்டும். அதன்பிறகு ஆண்டுக்கு ஒருமுறை இதே தடுப்பூசியைப் போட வேண்டும். முக்கியமாக, வீட்டுநாயைத் தெருநாயோடு பழகவிடக்கூடாது. அப்போதுதான் வீட்டு நாய்க்கு ரேபிஸ் நோய் தாக்குதல் இருக்காது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!