Home  |  அறுசுவை

காரட்டை பற்றி உங்களுக்கு தெரியுமா?

காரட்டை பற்றி உங்களுக்கு தெரியுமா?

நாம் தற்போது இயற்கை உணவுகளை புறம் தள்ளி பொரித்தெடுத்த உணவுகள், பதப்படுத்தப் பட்ட உணவுகள் ஆகியவற்றை அதிகமாக உண்ணுகிறோம்.மேலும் வைட்டமின் டானிக்குகள், சத்து மாத்திரைகள் ஆகியவற்றை உட்கொள்கிறோம். இவைகள் அனைத்துமே உடலுக்கானு வலுவையும், ஊக்கத்தையும் தருவதற்கு பதிலாக பல வகையான வியாதிகளுக்கு காரணமாகின்றன.இந்நிலையில் நமது தினசரி உணவுகளில் கீரைகள், காய்கள், பழங்கள், கிழங்குகள் போன்ற இயற்கையான உணவுகளை சேர்ப்பதால் பல்வேறு நோய்களில் இருந்து நாம் எளிதாக விடுபடலாம்.அந்த வகையில் மஞ்சள் முள்ளங்கி என அழைக்கப்படும் கேரட் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் இங்கு காண்போம்.

 

தாவர குடும்பம்: அம்பெலிஃபெரா 

கேரட் அறிவியல் பெயர்: Daucus carotta

பிறப்பிடம்: மத்திய ஆசியா 

நிறம்:  ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறம்

 

பயன்கள்:

 

கேரட்டில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்துகளும் நிறைந்துள்ளதால் உணவு சீரணத்திற்கு உதவுகிறது.  

 

மாலைக் கண் நோயை தடுக்கும் ஆற்றல் கொண்டுள்ளது.

 

ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தை குறைக்கவும், புற்று நோயிலிருந்து காக்கவும் கேரட் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 

வாய் துர்நாற்றத்தை போக்கும் வல்லமையும், குடல் புண்கள் வரமால் தடுக்கும் தன்மையும் நிறைந்து காணப்படுகிறது.

 

இவற்றில் உள்ள பீட்டா கரோட்டீன் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைக்கும் ஆற்றலும் கொண்டது.

 

கேரட்டை எலுமிச்சை சாறு சிறுது கலந்து சாப்பிட்டு வர பித்த கோளாறுகள் நீங்கும்.

 

ஆண்மை சக்தியை அதிகரிக்கும் தன்மை நிறைந்து காணப்படுகிறது. அதாவது பாதி வேகவைத்த முட்டையுடன் கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வர நல்ல பலன்களை அறியலாம்.

 

இரத்தத்தைச் சுத்தப்படுத்தவும், விருத்திச் செய்யவும் பயன்படுகிறது.

 

கேரட்டை பசும் பாலில் காய்ச்சி அதனுடன் காய்ந்த திராட்சை பழம் சேர்த்து தேன் கலந்து கொடுத்து வந்தால் உடல் வலுப்பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

 

கேரட்டை தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக வெட்டி பசும் பாலில் போட்டு அவித்து எடுத்து சிறிதளவு தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், குழந்தையின் எலும்புகள் பலப்படும். வளர்ச்சி சீராகும். இளைப்பு நீங்கி உடல் வலுப்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

 

கேரட்டை துருவி அதனுடன் தயிர் சேர்த்து நன்கு கலக்கி முகத்தில், கழுத்துப் பகுதியில் தடவி வந்தால் முகக்கருப்பு, முகச்சுருக்கம், முகவறட்சி, எண்ணெய் வடிதல் போன்றவை மாறி முகம் பளபளப்பாக காணப்படும்.

 

மலச்சிக்கலே மனிதனுக்கு நோயின் வாசலாகும். மலச்சிக்கலைப் போக்கினாலே மனிதன் நோயின்றி வாழலாம். நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால் செரித்து மலத்தை சீராக வெளியேற்றவும், மூலநோயின் தாக்கத்தையும் குறைக்கிறது.

 

பெண்களுக்கு மாதவிலக்கின்போது உண்டாகும் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் தண்மை நிறைந்து காணப்படுகிறது.

 

கருவுற்ற பெண்கள் தினமும் 25 கிராம் அளவு காரட்டை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், போலி வலிகள், களைப்பு ஏற்படாது. சோகை நீங்கும். பிறக்கும் குழந்தை நிறமாகவும், வலுவாகவும் பிறக்கும்.

 

ஞாபக சக்தி அதிகரிக்கும், புத்திகூர்மை உண்டாகும்.  கேரட் சாறுடன் ஏழு எட்டு பாதாம் பருப்புகள் உண்டு வந்தால், மூளை விழிப்புடன் இருக்கும். மூளைக்கு நல்லது. பைத்தியம் குறைக்கும் நிவாரணியாகவும் பயன்படுகிறது. 

 

இரத்தப் புற்றுக்கு தினமும்  கேரட் சாறு அருந்த ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

 

தரமான தாய்ப்பால் தொடர்ந்து கிடைக்க கேரட் சாறு அருந்தவும்.

 

கேரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்பதன் மூலம் மார்பகப் புற்று நோயிலிருந்து ஆரம்ப நிலையிலேயே விடுபடலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 

100 கிராம் கேரட்டில் உள்ள சத்துக்கள் விவரம்:

 

சக்தி (Energy)                                               48 கலோரிகள்
ஈரப்பதம்/நீர் (Moisture)                                 86 கிராம்
புரதம் (Protein)                                                  0.9 கிராம்
கொழுப்பு (Fat)                                                  0.2 கிராம்
தாதுக்கள் (Minerals)                                   1.1 கிராம்
நார்ச்சத்து (Fibre)                                        1.2 கிராம்
கார்போஹைட்ரேட்கள் (Carbohydrates)    10.6 கிராம்
கால்சியம் (Calcium)                                      80 மி.கி
பாஸ்பரஸ் (Phosporous)                              530 மி.கி
இரும்பு (Iron)                                               1.03 மி.கி
மெக்னீஸியம் (Magnesium)                            17 மி.கி
சோடியம் (Sodium)                                         35.6 மி.கி
பொட்டாசியம் (Potasium)                              108 மி.கி
செம்பு (Copper)                                                0.10 மி.கி
மாங்கனீசு (Manganese)                                   0.16 மி.கி
ஸிங்க்/நாகம் (Zinc)                                         0.36 மி.கி
குரோமியம் (Chromium)                                  0.017 மி.கி
கந்தகம் (Sulphur)                                               27 மி.கி
குளோரின் (Chlorine)                                         13 மி.கி
கரோட்டீன் (Carotene)                                  1890 மை.கி
தையாமின் (Thiamine)                                       0.04 மி.கி
ரைப்போஃப்ளேவின் (Riboflavin)                       0.02 மி.கி
நியாசின் (Niacin)                                                0.6 மி.கி
கொலின் (Choline)                                            168 மி.கி

 

 

   04 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!