Home  |  திரை உலகம்

பிரமாண்ட படங்களை இயக்குவது ஏன் : சொல்கிறார் ஷங்கர் !!

இந்த வருட தீபாவளிக்கு ரசிகர்கள் அனைவரும் ஆவளோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் ஐ. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீஸரும், பாடல்களும் இணையதளங்களை திணறடித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், தனது 'ஐ' படம் குறித்து இயக்குநர் ஷங்கர், சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் இயக்குநர் ஷங்கர் கூறியவற்றின் முக்கிய அம்சங்கள்:


ஐ' படத்துக்காக நடிகர் விக்ரமின் ஒத்துழைப்பு என்னை வியக்க வைத்தது. வேறு ஒரு நடிகர் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பாரா என்பது சந்தேகமே. இப்படத்தில் நடிப்பதற்காக நான் விக்ரமை மட்டுமே அணுகினேன். 


தற்போது நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம். தலையை மொட்டையடிக்க வேண்டும் என்றவுடன், வேறொரு நடிகராக இருந்தால் தயங்கி இருப்பார். ஆனால், விக்ரம் 'ஐ' படத்திற்காக எதையும் செய்யத் தயாராகவே இருந்தார்.


இப்படத்திற்கு ஏன் அதிக பட்ஜெட் என்பது நீங்கள் திரையில் பார்த்தால் தெரியும். 


தற்போது ரசிகர்கள் தொலைக்காட்சியில் அதிகமான படங்களைப் பார்த்து நாளுக்கு நாள் மாறியிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் பெரிய பெரிய விஷயங்களை எதிர்பார்த்து திரைப்படத்திற்கு வரும் ரசிகர்களை நாம் திருப்திப்படுத்த வேண்டும். பிரம்மாண்டத்தை எதிர்பார்த்துதான், எனது படத்திற்கு வருகிறார்கள். அவர்களை நான் திருப்திபடுத்த வேண்டும்.


சீன மொழியில் படத்தை டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டது தயாரிப்பாளரின் எண்ணம்தான். நாங்கள் சீனாவில் படப்பிடிப்பு நடத்தும்போதே, அங்குள்ள மக்கள் படத்தைப் பார்க்க விரும்பினார்கள்.


ரசிகர்கள் என்னிடம் சின்ன பட்ஜெட் படங்களைக் காண விரும்பினால், இயக்கத் தயாராகத்தான் இருக்கிறேன். ஆனால், ஷங்கரிடம் இருந்து பிரம்மாண்டத்தைதான் விரும்புகிறார்கள். அவர்கள் சொல்வதைதான் நான் செய்துக்கொண்டிருக்கிறேன். பெரிய பட்ஜெட் படங்கள் இயக்குவது போர் அடிக்கும்போது சிறு பட்ஜெட் படங்கள் இயக்குவேன்.


ஆனால், பெரிய பட்ஜெட் படங்கள் இயக்குவது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய கற்பனைக்கு பிரம்மாண்டமான பட்ஜெட் தேவைப்படுகிறது" என்று ஷங்கர் சிஎன்என்-ஐபிஎன் தொலைகாட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்