Home  |  அறுசுவை

டயட் கோழிக் குழம்பு (Diet Chicken Curry)

தேவையானவை :

 

கோழி - அரைக் கிலோ (தோல் கொழுப்பு நீக்கியது)

சின்ன வெங்காயம் - 30

தக்காளி - ஒன்று (நறுக்கியது)

பச்சை மிளகாய் - 2

இஞ்சி பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன் 

மல்லித் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

சோம்பு - ஒரு டீஸ்பூன்

ஏலக்காய் - 2

கிராம்பு - 2

பட்டை - ஒரு இன்ச் துண்டு

கறிவேப்பிலை - 2 கொத்து

மல்லிக்கீரை - ஒரு கொத்து

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்

 

செய்முறை :

 

1.கோழியை மஞ்சள் தூள்,வினிகர் சேர்த்து சுத்தம் செய்து வைக்கவும். ஒரு வாணலியில் அரை டேபிள்ஸ்பூன்  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் 20 சின்ன வெங்காயம்,ஒரு பச்சை மிளகாய், ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

 

2.முக்கால் பாகம் வதங்கியதும் சோம்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும்.அடுப்பை மிதமான தீயைக் வைத்து மிளகாய்தூள், மல்லித்தூள் சேர்த்து கிளறி உடனே அடுப்பை அணைத்து விடவும். வாணலியின் சூட்டிலேயே பொடிகள் வறுபட்டு விடும்.

 

3.மசாலா ஆறியதும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.குக்கரில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். ஏலக்காய் வெடித்ததும் இஞ்சி, பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.அதனுடன் மீதமுள்ள சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

 

4.முக்கால் பாகம் வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளி சேர்த்து வதக்கவும்.தக்காளி குழைந்ததும் கோழித்துண்டுகளை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.அரைத்த மசாலா, மஞ்சள் தூள், அரைக் கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி குக்கரை மூடி மிதமான தீயில்  5 விசில் வரை  வேக விடவும்.

5.குக்கரில் ஆவி அடங்கியதும் திறந்து மல்லிக்தழை தூவி கிளறி விடவும்.

Diet Chicken Curry

Ingredients for Diet Chicken Curry :


Chicken - 1/2 Kg(without skin),

Small Onions - 30,

Tomato - 1 (Chopped),

Green Chilies  - 2,

Ginger Garlic paste - 1 Tbsp,

Chilly Powder - 1 Tbsp,

Coriander Powder - 1-1/2 Tbsp,

Turmeric Powder - 1/4 Tsp,

Ani seeds - 1 Tsp,

Cardamom - 2,

Cloves - 2,

Cinnamon - 1 inch,

Curry Leaves - 2 Bunches,

Coriander Leaves - 1 Bunch,

Salt - as needed,

Oil - 1 1/2 Tbsp.


Method to make Diet Chicken Curry :


1. Wash the chicken pieces with add turmeric powder and vinegar. Heat oil in a pan then add 20 small onions , a green chilly, a bunch of curry leaves and fry them well. 

2. When its cooked in 3/4 th stage add aniseeds along with them and fry it well. In a low heat add chilli powder, coriander powder and stir it well then turn off the stove. 

3. Let it be cooled then grind it like a paste. Then heat oil in a cooker then add cinnamon, cloves, cardamom and season it well. When cardamom splets then add ginger garlic paste , curry leaves and stir it well until it green smells out. Then add small onions along with them and fry it well.

4. Then add finely chopped tomatoes after it cooked then add chicken pieces allow it boil well. Then add ground masala , turmeric powder, half cup of water, salt and stir them well. Keep the cooker closed and boil it till it comes 5 whistle. 

5. Finally add coriander leaves.


Diet Chicken Curry is ready to eat.

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!