Home  |  திரை உலகம்

ராஞ்சனா படத்துக்காக தனுஷுக்கு பிலிம்பேர் விருது !!

இந்திய சினிமா துறையில் தேசிய விருதுக்கு அடுத்தபடியாக உயரிய விருதாக கருதப்படும் பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா மும்பையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவை பாலிவுட் நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

 

பொதுமக்களின் வாக்கெடுப்பு, நிபுணர்கள் குழு அளிக்கும் பரிந்துரை ஆகியவற்றின் அடிப்படையில் விருதுக்கான படங்கள் மற்றும் நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. அந்த வகையில் முக்கிய விருதுகளும் அவற்றை வென்ற நட்சத்திரங்கள் பற்றிய தகவல்கள் பின்வருமாறு,

 

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான தீபிகா படுகோனே, கடந்த ஆண்டு 4 படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் நல்ல வரவேற்பை பெறாத போதிலும், ராம் லீலாவில் அவரது சிறந்த நடிப்பு மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பிலிம்பேர் விருதுக்கான சிறந்த நடிகையாக தீபிகா படுகோனே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  

 

இதேபோல், சிறந்த நடிகராக பர்கான் அக்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாக் மில்கா பாக் படத்திற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. இதேபேல் சிறந்த படமாக பாக் மில்கா பாக் படம் தேர்வு பெற்றுள்ளது. 

 

ராஞ்சனா படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த அறிமுக நாயகனாக தமிழ் நடிகர் தனுஷ் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு விருது வழங்கப்பட்டது.

 

அதேபோல ஷுத்த தேசி ரொமான்ஸ் படத்தில் அறிமுகமான வாணி கபூர் சிறந்த அறிமுக நாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்