Home  |  திரை உலகம்

தேசிங்கு ராஜா ( Desingu Raja )

தேசிங்கு ராஜா ( Desingu Raja )

Movie Name: Desingu Raja தேசிங்கு ராஜா
Hero: VIMAL
Heroine: BINDU MADHAVI
Year: 2013
Movie Director: EZHIL
Movie Producer: ESCAPE ARTISTS MOTION PICTURES
Music By: D.IMAAN


கிளியூர், புலியூர் என இரண்டு கிராமத்துப் பெருசுகளுக்கும் இடையே தீராப் பகை. ஒரு கொட்டைப் பாக்கில் ஆரம்பித்த அந்தப் பகை, இரு குடும்பத்திலும் நான்கைந்து தலைகளை காவு வாங்குகிறது. இந்த சூழலில் இந்த இரு குடும்பத்தின் இப்போதைய தலைமுறையைச் சேர்ந்த இதயக் கனியும் (விமல்), தாமரை (பிந்து மாதவி)யும் காதலிக்கிறார்கள். இருவரும் திருமணம் செய்து கொண்டாலாவது 50 ஆண்டு கால பகை தீரும் என நினைத்து, காதலியின் தந்தையிடம் தனியாக வந்து திருமணத்துக்கு அனுமதி கேட்கிறான் இதயக்கனி. ஆனால் அவரோ இதயக்கனியைத் தீர்த்துக் கட்ட முயல்கிறார்.

அவர் கண்ணெதிரிலேயே தாமரைக்கு தாலி கட்டி, தன் நோக்கம் பகையை வளர்ப்பதல்ல, தீர்ப்பதுதான் என நிரூபிக்க முயல்கிறான் இதயக்கனி. அந்த நேரம் பார்த்து இதயக்கனியின் ஊர்க்காரர்கள் தாமரையின் கண்ணெதிரிலேயே அவள் தந்தையைக் கொல்கிறார்கள். இதயக்கனிதான் திட்டமிட்டு தன் தந்தையைக் கொன்றதாக நம்பிவிடுகிறாள் தாமரை. ஆனால் தாலிகட்டிய மனைவி தாமரையை தன்னோடு அனுப்புமாறு பஞ்சாயத்து வைக்கிறான் இதயக் கனி. தாமரையும் தன் தந்தையைக் கொன்ற கணவனை பழிவாங்க அவன் வீட்டுக்கு வருகிறாள். மருதமலை மாமணியே... பாடலுடன் தொடங்குகிறது முதல் காட்சி. பாடல் முடிந்து ஹீரோ அறிமுகமான சில நிமிடங்களில் ஹீரோயினுடன் காதல்... அப்புறம் கல்யாணத்துக்கு முன்பே பழமண்டியில் மேற்படி முடிந்துவிடுகிறது! அடுத்த காட்சியில் திருமணம், முக்கிய பகையாளியும் செத்துப் போக..

இனி எப்படி நகரப் போகிறது கதை என்று பார்த்தால்... கணவனைப் பழிவாங்க மாமியார் வீட்டுக்கு வருகிறார் பிந்து மாதவி. கூடவே பாதுகாப்புக்காக பத்து அல்லக்கைகளோடு வருகிறார். அப்போது ஆரம்பிக்கும் காமெடி. முதலிரவைத் தடுக்க சூரி குரூப் ஒருபக்கம் திட்டம் போட, மாப்பிள்ளைக்குப் பாதுகாப்பு என சிங்கம்புலி - சாம்ஸ் குரூப் பதம் பார்க்கிறது. ரவி மரியா டெரர் வில்லனாக அறிமுகமாகி, க்ளைமாக்ஸ் கபடி சீனில் கங்னம் ஸ்டைல் டான்ஸ் போட்டு கலகலப்பூட்டுகிறார். விமலுக்கு பழகிய வேடம். ரொம்பவே இயல்பாக நடித்திருக்கிறார். மனைவியிடம் பாவமாக கெஞ்சும்போது சண்டைக் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். வினுச் சக்கரவர்த்தி, ஞானவேல், வனிதா ஆகியோரும் தங்கள் வேடங்களைச் சிறப்பாக செய்துள்ளனர்.

  17 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பிடிக்கல… மாத்துங்க! அஜீத் மறுப்பால் அதிர்ச்சி!
விஜய்யின் அடுத்தப்படமும் இதே ஸ்டைல் தான்
கமலின் கருவிழி பிதுங்குகிறதா..?? நிகழ்ச்சி தொடங்கி அடுத்த நாளே வெளியானது, விஜய் டிவி “பிக் பாஸ்’ ஷோவ
இது எல்லாமே விஜய் ரசிகர்களால் தான்- மனம் நெகிழும் பிரபலம்
'தல 58' படத்தின் இயக்குனர் இவர்தான் உறுதியான தகவல்!
விஜய்-முருகதாஸ் படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளரா?
சர்வைவா பாடலை கேட்ட அஜித் என்ன சொன்னார் தெரியுமா- யோகி.பி தகவல்
அஜித் ரசிகர்களே அடுத்த அதிரடிக்கு தயாரா- ஒரு ஸ்பெஷல் தகவல்
ஜுலை 1ம் தேதிக்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கும் விஜய் ரசிகர்கள்- அப்படி என்ன ஸ்பெஷல்
அஜித்தின் விவேகம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஸ்பெஷல் விஷயம்