Home  |  நாட்டு நடப்பு

ட்விட்டரில் கருணாநிதியை கலாய்க்கும் தயாநிதி !!

ட்விட்டரில் கருணாநிதியை கலாய்க்கும் தயாநிதி !!

மு.க. அழகிரி வெறுக்கத்தக்க வார்த்தைகளை பேசினார்.. ஸ்டாலின் இறந்து போய்விடுவார் எனக் கூறினார் என்று கருணாநிதி உருக்கமாக பேட்டி கொடுத்ததைத் தொடர்ந்து ட்விட்டரில் அழகிரியின் மகன் துரை தயாநிதி தனது தாத்தா கருணாநிதியை எவ்வளவு உச்சமாக கலாய்க்க முடியுமோ அப்படி கலாய்த்துக் கொண்டிருக்கிறார். 

 

கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக மு.க. அழகிரி கடந்த 24-ந் தேதி திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து நாள்தோறும் செய்தியாளர்களிடம் பேசி வரும் அழகிரி, திமுக தலைமையை விமர்சித்து குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார். 

 

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த தி.மு.க தலைவர் கருணாநிதி, அழகிரி வெறுக்கத்தக்க வார்த்தைகளை பயன்படுத்தினார் என்றும் மற்றொரு மகன் மு.க. ஸ்டாலின் இன்னும் மூன்று மாதத்தில் இறந்து போய்விடுவார் என்று சொன்னதையெல்லாம் எப்படி பொறுப்பது எனவும் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கும் அழகிரி விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

 

இந்த பஞ்சாயத்து இப்படி ஓடிக் கொண்டிருக்க தாத்தா கருணாநிதியை ட்விட்டரில் சினிமா படங்களின் துணையோடு கலாய்த்துக் கொண்டிருக்கிறார் அழகிரியின் மகன் துரை தயாநிதி. 

 

மு.க. அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்டது முதலே ரொம்பவுமே ஆக்டிவ்வாக ட்விட்டரில் குதித்திருக்கிறார் துரை தயாநிதி. 

 

நேற்று மதுரைக்கு அழகிரி போய் சேர்ந்த உடன் ட்விட்டரில் அழகிரி மதுரை வந்துவிட்டார் என பதிவிட்டிருக்கிறார் தயாநிதி. அதில் ஒரு ஆதரவாளர் வந்து,, இது ச்சும்மா ட்ரைலர்தான்.. ஜனவரி 30-ல்தான் ரியல் மாஸ்னு உசுப்பேற்றிவிட்டுப் போயிருக்கிறார். 

 

இன்று கருணாநிதியின் அறிக்கை வெளியான உடனேயே, முதலில், பொய்யான குற்றச்சாட்டுகள் நீண்டகாலம் நிலைக்காது.. உண்மை ஒருநாள் கண்டிப்பாக வெளியே வரும்.. ஒரு மூத்த தலைவரிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை என்று நேரடியாகவே கருணாநிதியை போட்டு தாக்கி இருக்கிறார் துரை தயாநிதி.

 

அத்துடன் ஓய்ந்துவிடவில்லை துரை தயாநிதி.. சிறிது நேரம் கழித்து சூரியன் படத்தில் "அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா" என கவுண்டமணி பேசும் புகைப்படத்தை போட்டு, பொய்யான குற்றச்சாட்டுகள் சொன்ன பிறகு என் மனதில் இந்த காட்சிதான் நினைவுக்கு வந்தது என்று போட்டு கலாய்ச்சியிருக்கிறார்.' 

 

இத்துடன் விட்டுவிடவில்லை துரை தயாநிதி.. நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் திரைப்பட விஜய் சேதுபதி சிவாஜி செத்துட்டாரா என கேட்கும் வாசகத்துடன் ஒரு படத்தை மட்டும் போட்டுவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் துரை தயாநிதி..

 

துரை தயாநிதியின் இந்த நக்கலுக்கும் கலாய்ப்புக்கும் ட்விட்டரில் வந்து ஒருசிலர் எதிர்ப்பையும் பதிவு செய்துவிட்டும் போயிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

  23 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?