Home  |  ஆன்மிகம்

கோபுர தரிசனம் - கும்பாபிஷேக கிரியைகளும் விளக்கமும் !!

கோபுர தரிசனம் - கும்பாபிஷேக கிரியைகளும் விளக்கமும் !!

 

ஆலயங்கள் அமைத்து, அங்கு தெய்வ திருவுருவச் சிலைகளை எழுந்தருளச் செய்து அவற்றை வழிபடுவதன் மூலம் ஆத்ம ஈடேற்றமும், இஷ்ட சித்திகளையும் பெறும் வழிமுறைகளை ஞானிகளும், முனிவர்களும், சித்தர்களும் நம் முன்னோர்களும் நமக்கு கூறிசென்ருள்ளனர்.

 

மேலும் கோயில் திசை நான்கிலும் விண்ணை முட்டும் பெரிய கோபுரங்களை நிர்மாணித்து அவற்றின் சக்தியால் உயிர்கள் நல்ல முறையில் வாழும் சூட்சுமத்தினையும் ஏற்படுத்தித் தந்துள்ளார்கள்.

 


கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். ஆலயம் தொழுவது சாலவும் நன்றே என்ற நமது முன்னோர்களின் பொன் மொழிகள் இதன் பயன் கருதியே கூறியுள்ளனர் .

 

கதிர்வீச்சு பற்றி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர் அறிந்திருந்தார்கள் என்பது வியப்பான செய்திதான் .

 

நாம் பல நல்ல, தீய கதிர் வீச்சுகள் நிறைந்த சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மூலகங்களில் சக்திமாற்றம் ஏற்படும் போது கதிர்வீச்சு தோன்றுகின்றது.

 


இதனை நாம் கண்ணால் காண முடியாது. ஆனால் அதன் தாக்கங்களை நம்மால் உணரமுடியும். நல்ல கதிர்வீச்சு சக்திகளை வெளிப்படுத்தும் வகையிலேயே ஆலயங்கள் அமைக்கப் பெற்றுள்ளன.

 


ஆகம விதிப்படி கோயில் அமைக்கப்பெற்று, கும்பம் அபிஷேகிக்கப்பட்டு, காலம் தவறாது (12 வருடங்களுக்கு ஒருமுறை) கும்பாபிஷேகம் செய்யப்பெற்று வழிபாடு நடந்து கொண்டிருக்கும் கோயில்களில் உள்ள கோபுரங்களின் மேல் தங்கத்தாலும் அல்லது செம்பினாலும் செய்யப்பட்ட கலசங்கள் தனது கூரிய முனை வழியாக ஆகாயத்தில் உள்ள உயிர் சக்தி என்று அழைக்கப்படும் பிராண சக்தியை கிரகித்து வெளிவீசுகின்றன.

 


அந்த சக்தியை நம் உடல் பெறுவதால் புத்துணர்ச்சி, புது உணர்வு, உள்ளத் தூய்மை, ஆன்மீக ஈர்ப்பு, நோயின்மை, நோய் எதிர்ப்பு சக்தி அடைகிறோம்.

 

 

எனவே கோபுர தரிசனம் செய்வோம் கோடி புண்ணியம் பெறுவோம்.

  10 Apr 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!