Home  |  அறுசுவை

பாகற்காய் பிரட்டல் (bittergourd mixturel)

பாகற்காய் பிரட்டல் (bittergourd mixturel)

தேவையானவை:

 

பாகற்காய் - 2

பெரிய சிகப்பு வெங்காயம் - ஒன்று

தக்காளி - ஒன்று

மிளகாய்த்தூள் -‍ ஒரு டீஸ்பூன் 

மல்லித்தூள் - ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் ‍- ஒரு டீஸ்பூன்

சர்க்கரை ‍- ஒரு டீஸ்பூன்

புளி பேஸ்ட் - அரை டீஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை - சிறிது

உப்பு -‍ தேவையான அளவு

எண்ணெய் ‍- 3 டீஸ்பூன்

தேங்காய் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்

கசகசா - ஒரு டீஸ்பூன்

 

செய்முறை:

 

1.பாகற்காயை நீளவாக்கில் நான்காக வெட்டி, வைக்கவும். நறுக்கிய பாகற்காய் துண்டுகளுடன், சிறிது உப்பு சேர்த்து கையால் நன்கு கலந்து விட்டு வைக்கவும்.

2.கசகசாவையும், தேங்காய்த் துருவலையும் சிறிது தண்ணீர் சேர்த்து, நன்கு மைய அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

3.கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும், உப்பு கலந்து வைத்த பாகற்காய் துண்டுகளை கையால் பிழிந்து, தண்ணீரை எடுத்து விட்டு கடாயில் போட்டு நன்கு வதக்கவும்.

4.முக்கால் பாகம் பாகற்காய் வெந்ததும், அதை வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றி விட்டு, மீண்டும் அதே கடாயை அடுப்பில் வைத்து, 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.

5.வெங்காயம் நிறம் மாறியதும், மஞ்சள்தூள் சேர்த்து அதனுடன் தக்காளியையும் போட்டு மேலும் வதக்கவும்.

6.வெங்காயம், தக்காளி எல்லாம் நன்கு வதங்கியதும், எல்லா தூள் வகைகளையும் கலந்து, உப்பு சேர்த்து ஒருமுறை வதக்கவும். பிறகு இதனுடன் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுது, புளி பேஸ்ட் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

7.கொதி வந்த நிலையில், ஏற்கனவே வதக்கி வைத்திருக்கும் பாகற்காய் துண்டுகளை போட்டு, சர்க்கரையையும் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.

8.இப்போது, சுவையான பாகற்காய் பிரட்டல் தயார்.

 

  17 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!