Home  |  அறுசுவை

மட்டன் சுக்கா (mutton chukka)

மட்டன் சுக்கா (mutton chukka)

தேவையானவை:

 

மட்டன் – ஒரு கிலோ

வெங்காயம் – இரண்டு

தக்காளி – இரண்டு

இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

மிளகாய் வற்றல் – ஐந்து

முழுப்பூண்டு – ஒன்று

மிளகுத்தூள் – இரண்டு டீஸ்பூன்

ஜீரகத்தூள் – அரை டீஸ்பூன்

மஞ்சள்த்தூள் – அரை டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – இரண்டு டீஸ்பூன்

சோம்பு – அரை டீஸ்பூன்

எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு – ஒன்றரை டீஸ்பூன்

முந்திரி – பத்து

 

செய்முறை:

 

1.முதலில் மட்டனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, நன்கு கழுவி வைத்துக்கொள்ளவும்.

2.முந்திரியை சிறிது எண்ணெயில் வறுத்து வைத்துக்கொள்ளவும்.

3.ஒரு குக்கரில் மட்டன், வெங்காயம், தக்காளி, ஒன்றரை டீஸ்பூன் மிளகாய்த்தூள்,இஞ்சி பூண்டு விழுது, ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள், ஒரு டீஸ்பூன் ஜீரகத்தூள்,ஒன்றரை டீஸ்பூன் உப்பு மற்றும் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வரும்வரை வேகவைக்கவும்.

4.ஒரு பெரிய கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், சோம்பு மற்றும் மிளகாய் வற்றலைப்போட்டு கிளறிவிட்டு, அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் கறிவேப்பிலை போட்டு கிளறிவிட்டு, பின் வேகவைத்த மட்டன் குழம்பை போட்டு வதக்கவும்.

5.மட்டன் நன்கு வெந்தவுடன் நசுக்கிய பூண்டு, ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள், வருத்த முந்திரியை சேர்த்து தண்ணீர் சுண்டும் வரை வேக வைக்கவும்.

  16 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!