Home  |  அறுசுவை

வெண்டைக்காய் வதக்கல் ( ladies finger fry)

வெண்டைக்காய் வதக்கல் ( ladies finger fry)

தேவையானவை:

 

வெண்டைக்காய் - 15 வரை

வெங்காயம் - 1

தக்காளி - 1

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

தனியாத்தூள் - 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - 1/2 டீஸ்பூன்

 

செய்முறை:

 

1.வெண்டைக்காயை கழுவி 2 அங்குல நீளத்திற்கு சற்று சாய்வாக வெட்டிக்கொள்ளவும்.

2.ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் வெண்டைக்காயைப் போட்டு, காயின் மேல் பிரவுன் கலரில் புள்ளிகள் தோன்றும் வரை வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

3.பிறகு அதே வாணலியில் மீதமுள்ள எண்ணையை விட்டு கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் சீரகம், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும்.

4.பின்னர் வெங்காயம் சேர்த்து, வதக்கவும். அத்துடன் வதக்கி வைத்துள்ள வெண்டைக்காய், மற்றும் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, கிளறி விடவும்.

5.கடைசியில் தக்காளித்துண்டுகளைச் சேர்த்துக் கிளறி, மேலும் சில வினாடிகள் வதக்கி, இறக்கி வைக்கவும்.

  16 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!