Home  |  அறுசுவை

காலிஃப்ளவர் கறி (cauliflower curry)

காலிஃப்ளவர் கறி (cauliflower curry)

தேவையானவை:

 

காலிஃப்ளவர் 1

வெங்காயம் 2

உருளைக்கிழங்கு 2

தக்காளி 1

மஞ்சள் தூள்,தனியா தூள்,மிளகாய் தூள்-1 டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை அரை கப்

கரம் மசாலா 1 டீஸ்பூன்

இஞ்சி,பூண்டு விழுது 2 டீஸ்பூன்

எண்ணைய்,உப்பு தேவையானது

 

செய்முறை:

 

1.ஒரு கடாயில் எண்ணைய் வைத்து காலிஃப்ளவர்,மஞ்சள்தூள்,உப்பு மூன்றையும் சேர்த்து வதக்கவும்.

2.சிறிது வெந்ததும் தனியே எடுத்து வைக்கவும்.உருளைக்கிழங்கை தனியே வதக்கி எடுத்து வைக்கவும்.

3.பின்னர் கடாயில் எண்ணைய் வைத்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.

4.மிளகாய்தூள்,தனியாதூள்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து இரண்டு கப் தண்ணீர் விடவும்.

5.தனியே எடுத்துவைத்துள்ள காலிஃப்ளவர்,உருளைக்கிழங்கை சேர்த்து கொதிக்கவிடவும்.

6.நன்றாக கொதித்தவுடன் கரம்மசாலா பொடியை தூவி இறக்கவும்.

7.கடைசியில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையை தூவவும்.

  19 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!