Home  |  அறுசுவை

எலும்பு நீக்கிய கோழி மிளகு மசாலா (boneless chicken milagu masala)

தேவையானவை:

 

எலும்பு நீக்கிய கோழி இறைச்சி - 1/4 கிலோ.

வெங்காயம் - 1

தக்காளி சிறியது - 1

இஞ்சி பூண்டு - 1/4 டீஸ்பூன்

பட்டைத் தூள் - 1/4 டீஸ்பூன்

மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்

எண்ணை - 3 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - 1 கொத்து.

கொத்தமல்லி தழை - பொடியாக நறுக்கியது.

உப்பு- தேவையான அளவு.

மிளகு - 2 டீஸ்பூன்

ஜீரகம் - 1/2 டீஸ்பூன்

தனியாத்தூள் - 1/2 டீஸ்பூன்

பூண்டு - 6 பல்

 

செய்முறை:

 

1.முதலில் மிளகு,சிரகம்,தனியாதூள்,பூண்டு இவை நான்கையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.

2.ஒரு கனமான பாத்திரத்தில், எண்ணை சேர்த்து சூடானவுடன் வெங்காயத்தை மிதமான தீயில் பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

3.பின்பு பொடியாக நறுக்கிய தாக்காளியை போட்டு 1 நிமிடம் வதக்க வேண்டும்.

4.இப்போது எலும்பு நீக்கிய கோழி இறைச்சியை அதில் கலந்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.

5.இதனுடன் இஞ்சி பூண்டு விழுது, கறி வேப்பிலை சேர்த்து வாசம் வரும்வரை கிளறி, மிளகாய்த் தூள் சேர்த்து பிரட்ட வேண்டும்.

6.பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவை கொட்டி, மூழ்கும்வரை நீர் ஊற்றி மிதமான தீயில் எண்ணை மிதந்து வரும் வரை சமைக்கவும்.பிறகு பரிமாறவும்.

 

  19 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!