Home  |  அறுசுவை

மாங்கொட்டைக் குழம்பு (Mango Nut Curry)

தேவையானவை :

 

மாங்கொட்டைகள் - 3 (உப்பில் ஊற வைத்து,காய வைத்தது)

புளி - ஒரு எலுமிச்சை அளவு

மல்லி விதை - 4 டீஸ்பூன்

மிளகு - 1/4 டீஸ்பூன்

சீரகம் - 6 டீஸ்பூன்

எண்ணெய் - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

வெல்லம் - சிறியது

மிளகாய் வற்றல் - 10

 

 

தாளிப்பதற்கு :

 

கடுகு - 1/2 டீஸ்பூன்

எண்ணெய் - 2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - தேவையான அளவு

 

செய்முறை :

 

1.ஒரு பாத்திரத்தில் வெந்நீரில் மாங்கொட்டைகளை பத்து நிமிடம் ஊற வைக்கவும். புளியைக் கரைத்து வடிகட்டவும். 

2.ஒரு வாணலியில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, மிளகாய் வற்றல், மல்லிவிதை இரண்டையும் வறுத்து, வறுபட்டதும் மிளகு, சீரகத்தைச் சேர்த்துக் கிளறி உடனே அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். 

3.கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய்  விட்டு கடுகு தாளித்து, கறிவேப்பிலை போட்டு, கரைத்த புளி, உப்பு, வெல்லம், அரைத்த மசாலா எல்லாம் சேர்த்துக் கொதிக்க வைத்து, கொதி வந்ததும் மாங்கொட்டைகளைப் போட்டு நன்றாகக் கொதித்து கெட்டியானதும் இறக்கவும்.

Mango Nut Curry

Ingredients for Mango Nut Curry:

 

Mango Nut-3 (Marinated in salt and Dried)

Tamarind-Small Lemon Size

Coriander Seeds-4 Tsp

Pepper-1/4 Tsp

Cumin-6 Tsp

Oil-1/2 Tsp

Salt-as Needed

Jaggery-Little

Dry Chilly-10

 

Ingredients for Tempering:

 

Mustard-1/2 Tsp

Oil-2 Tsp

Curry Leaves-as Needed

 

Procedure to make Mango Nut Curry:

 

1. In a vessel, put mango nuts and soak in hot water for 10 minutes. Mix the tamarind with water and extract the juice.

2. Heat 1/2 tea spoon of oil in a pan, add dry chilly, coriander seeds and fry and then add pepper and cumin and stir for a while and then remove from flame. Allow to cool and grind them to a fine powder.

3. Heat 2 tea spoons of oil in a pan, add mustard and let to splutter and then add curry leaves, tamarind juice, salt, jaggery, grinded powder and allow to boil. When the curry starts boiling, add mango nuts. When mango nuts boiled well and turns thick consistency, remove from flame.

 

 

 

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!