Home  |  அறுசுவை

கோலா உருண்டை(Kola Urundai)

தேவையானவை :

 

மட்டன்  - 200 கிராம்

பச்ச மிளகாய் - ஒன்று

கரம் மசாலா தூள் - கால் டீஸ்பூன்

தேங்காய் - இரண்டு பத்தை

வெங்காயம் - ஒன்று

இஞ்சி - ஒரு இன்ச் துண்டு

பூண்டு - 4 பல்

காய்ந்த மிள‌காய் - 2

உப்பு - அரை டீஸ்பூன் 

கொத்து ம‌ல்லி -கால் க‌ப் (பொடித்தது)

சீர‌க‌ தூள் - அரை டீஸ்பூன்

 

 

அரைத்ததில் கலக்கி கொள்ள‌ தேவையானவை :

 

பொட்டு கடலை - ஒரு டேபிள் ஸ்பூன்

கார்ன்பிளார் மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்

 

 

குழ‌ம்பிற்கு தேவையானவை :

 

ம‌ட்ட‌ன் எலும்புட‌ன் - 100 கிராம்

த‌க்காளி - இர‌ண்டு

வெங்காய‌ம் - இர‌ண்டு

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

உப்பு தூள் - குழம்பிற்கு தேவையான அளவு

எண்ணை - முன்று டீஸ்பூன்

ப‌ட்டை - ஒரு துண்டு

தேங்ககாய் - முன்று துண்டு

கொத்து ம‌ல்லி - சிறிது

இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு டீஸ்பூன்

மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்

தனியாதூள் - ஒரு டேபிள் ஸ்பூன்

 

செய்முறை :

 

1.சிறியதாக அறிந்த ம‌ட்ட‌னில் காய்ந்த மிளகாய்,ம‌ஞ்ச‌ள் தூள், உப்பு,சீர‌க‌ தூள் க‌ர‌ம் ம‌ச‌லா தூள் சேர்த்து ந‌ன்கு பிர‌ட்டி இஞ்சி,பூண்டு, ப‌ச்ச‌மிள‌காய், கொத்தும‌ல்லித‌ழை,தேங்காய்ம் வெங்காய‌ம் எல்லாவ‌ற்றையும் பொடியாக‌ அரிந்து சேர்க்க‌வும்.பொட்டுக‌ட‌லையை பொடித்து த‌னியாக‌ வைக்க‌வும். பிற‌கு பிச‌றி வைத்த‌தை த‌ண்ணீர் விடாம‌ல் மிக்சியில் அரைக்க‌வும். அரைத்த‌ க‌ல‌வையுட‌ன் பொட்டுக‌ட‌லைமாவு,கார்ன் பிளார் மாவு க‌ல‌க்கி த‌னியாக‌ வைக்க‌வும்.

2.வாணலியில் எண்ணையை காய‌வைத்து அதில் ப‌ட்டை,வெங்காய‌ம், இஞ்சி பூண்டு, பாதி த‌க்காளி, கொத்தும‌ல்லி சேர்த்து தாளித்து ம‌ட்ட‌னையும் சேர்த்து தூள்வ‌கைக‌ள் அனைத்தையும் சேர்த்து ந‌ன்கு கிள‌றி ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

3.மீதம் உள்ள தக்காளியுடன் தேங்காய் சேர்த்து நன்கு அரைத்து சேர்த்து குக்கரில் முன்று விசில் விட்டு இரக்கவும். மட்டன் குழம்பு கொதிப்பதற்குள்,அரைத்து வைத்துள்ள உருண்டைகளை பொரித்தெடுத்து கொதித்து கொண்டிருக்கும் கடைசியாக குழம்பில் போட்டு மீண்டும் சிறிது நேரம் கொதிக்க விட்டு இரக்கவும்.

Kola Urundai

Ingredients for Kola Urundai:

 

Mutton-200 G

Green Chilly-1

Garam Masala-1/4 Tsp

Coconut-2 Pieces

Onion-1

Ginger-1 Inch Piece

Garlic-4 Flakes

Dry Chilly-2

Salt-1/2 Tsp

Coriander-1/4 Cup (Chopped)

Cumin-1/2 Tsp

 

Ingredients to Mix with Grinded Paste:

 

Roasted Gram-1 Tbsp

Corn Flour-1 Tbsp

 

Ingredients to Make Curry:

 

Mutton along with Bone-100 G

Tomato-2

Onion-2

Turmeric Powder-1/4 Tsp

Salt-as Needed

Oil-3 Tsp

Cinnamon-1 Piece

Coconut-3 Pieces

Coriander-Little

Ginger, Garlic Paste-2 Tsp

Chilly Powder-1 Tsp

Coriander Powder-1 Tbsp

 

Procedure to make Kola Urundai:

 

1. Mix the minced mutton together with dry chilly, turmeic powder, salt, cumin powder and garam masala powder. Then add ginger, garlic paste,chopped green chillies, coriander leaves and coconut. Grind the roasted gram and keep aside. Then grind the mixed mutton in mixie without adding water. Mix roasted powder and corn flour powder together with grinded mutton and set aside.

2. Heat oil in a pan, add cinnamon, onion, ginger, garlic paste, half quantity of tomato, coriander and let to splutter. Then add mutton and add given masala powders. Stir well and add 1 cup of water and allow to boil well.

3. Grind the remaining tomato along with coconut and add in to cooker. Allow 3 whistles and remove from flame. Now deep fry the grinded mutton balls and put in to boiling sambar and let to boil a while and then remove from flame.

 

 

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!