Home  |  அறுசுவை

கருவாடு மொச்சைகொட்டை கத்திரிக்காய் (dried fish kidney beans brinjal)

தேவையானவை:

 

கருவாடு - 50 கிராம்

கத்திரிக்காய் - 200 கிராம்

மொச்சை - 100 கிராம் (தோலுரித்தது)

வெங்காயம் - 100 கிராம்

புளி - சிறிய எலுமிச்சை அளவு

தேங்காய் விழுது - 2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

கருவேப்பிலை - 2 சிட்டிகை

தக்காளி - 100 கிராம்

பச்சை மிளகாய் - 2

பூண்டு - 6 பல்

உப்பு - தேவைக்கு.

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

மிளகு, சீரக தூள்கள் - தலா அரை டீஸ்பூன்

மல்லித்தூள் - 2 டீஸ்பூன்

 

செய்முறை :

 

1.கருவாட்டு துண்டை அடுப்பில் சுட்டு எடுக்கவும்.அதை நன்கு அலசி சிறிய துண்டாக போட்டுக் கொள்ளவும்.ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்து வரவும்,கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்து,நறுக்கிய வெங்காயம்,பூண்டு போட்டு வதக்கவும், அத்துடன் நறுக்கிய கத்திரிக்காய் சேர்க்கவும்.நன்கு வதங்கட்டும், பின்பு தக்காளி பச்சை மிளகாய் சேர்க்கவும். உப்பு மிகச் சிறிதளவே போட்டு மூடியிட்டு வதங்க விடவும்.

2.புளிக்கரைசலோடு மசாலா தூள்கள் அனைத்தும் போட்டு,தேங்காய் விழுதும் சேர்த்து தேவைக்கு தண்ணீர் கலந்து வதங்கியவற்றுடன் சேர்க்கவும். தோலுரித்த மொச்சை சேர்க்கவும். நன்கு கொதித்து மசாலா புளி வாசனை அடங்கியதும்.சுத்தம் செய்த கருவாட்டை போடவும்.அடுப்பை மிதமான தீயில் 5 நிமிடம் வைக்கவும்.கொதி வரும்பொது இறக்கவும்.

Dried fish kidney beans brinjal

Ingredients for Dried fish Kidney Beans Brinjal:

 

Dry Fish-50 g

Brinjal-200 g

Kidney Beans-100 g (Peeled)

Onion-100 g

Tamarind-Small Lemon Size

Coconut Paste-2 tbsp

Oil-3 tbsp

Mustard-1/2 tsp

Curry Leaves-2 Pinch

Tomato-100 g

Green Chilly-2

Garlic-6 Flakes

Salt-as Needed

Chilly powder-1 tsp

Turmeric Powder-1/4 tsp

Pepper, Cumin- Each 1/2 tsp

Coriander Powder-2 tsp

 

Procedure to make Dried Fish Kidney Beans Brinjal:

 

1. Heat the dry fish in flame, wash and cut in to small pieces. Heat oil in a pan, add mustard, curry leaves and let to splutter and then add chopped onion, garlic and saute well. Then add chopped brinjal and let to boil well. Then add green chilly and tomato. Add salt and cover the pan and allow to boil.

2. Add tamarind juice, given masala powder, coconut paste and water and stir and boil well. Then add dried fish. Allow medium flame for 5 minutes. When starts boiling, remove from flame.

 

 

 

  12 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!