Home  |  அறுசுவை

கருவாட்டுக் குழம்பு (dried fish curry )

தேவையானவை :

 

நெத்திலிக் கருவாடு - 30

மொச்சைக் கொட்டை - அரை கப்

புளி - பெரிய நெல்லிக்காய் அளவு

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 3

கத்திரிக்காய் - 2 (நான்காக நறுக்கியது)

முருங்கைக்காய் - 3

சின்ன வெங்காயம் - 12 (இரண்டாக நறுக்கியது)

வெந்தயம் - ஒரு டீஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்

மல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன்

 

 

செய்முறை:

 

1.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும், மொச்சைக் கொட்டையை போட்டு 2 நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். புளியில் 3 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து, பிறகு அதில் மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு போட்டு கலக்கி வைக்க வேண்டும். அதிலேயே இரண்டாக கீறிய பச்சை மிளகாய், நறுக்கின தக்காளி, வறுத்து எடுத்த மொச்சை சேர்க்க வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம் தாளித்து பின்னர் நறுக்கின சின்ன வெங்காயம் போட்டு வதக்க வேண்டும்.

2.அதனுடன் புளி கரைசலை ஊற்ற வேண்டும்.அத்துடன் நறுக்கின கத்திரிக்காய், முருங்கைக்காய் துண்டங்களை சேர்க்க வேண்டும். வாணலியை மூடி வைத்து வேகவிடவும். சுமார் பத்து நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். அதன் பின்னர் கொதிக்கும் குழம்பில் நன்கு கழுவிய கருவாட்டைச் சேர்க்கவும். லேசாக கிளறிவிட்டு வேகவிட வேண்டும். நன்கு கொதித்ததும் இறக்கவும்.

Dried Fish Curry

Ingredients for Dried Fish Curry:

 

Dried Anchovies-30

Broken Beans-1/2 Cup

Tamarind-Big Gooseberry Size

Tomato-1

Green Chilly-3

Brinjal-2 (Chopped)

Drumstick-3

Small Onion-12 (Chopped)

Fenugreek-1 Tsp

Oil-2 Tbsp

Chilly Powder-1 1/2 Tbsp

Coriander Powder-2 Tbsp

 

Procedure to make Dried Fish Curry:

 

1. Heat oil in a pan, add broken beans and fry well and set aside. Extract the tamarind juice and mix along with chilly powder, coriander powder and salt. Then add peeled green chilies, chopped tomatoes and fried broken beans. Heat oil in a pan, add fenugreek and let to splutter and then add small onion and saute well.

2. Then add tamarind mixure. Add brinjal and drumstick pieces. Cover the pan and let to boil for 10 minutes. Then add washed dried fish in boiling curry. Stir gently and let to boil well. Remove from flame and serve it.

 

 

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!