Home  |  அறுசுவை

கட்லெட் குழம்பு (Cutlet Curry)

தேவையானவை :

 

முட்டை - 6

பெரிய கேரட் - 1

பொட்டுகடலைமாவு - அரை கப்

தேங்காய் - 1 முடி

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 3

மிளகாய் - 6

இஞ்சி - சிறிதளவு

சோம்பு - 1 ஸ்பூன்

தனியா - 2 ஸ்பூன்

கசகசா - 2 ஸ்பூன்

பூண்டு - 8

சீரகம் - 2 ஸ்பூன்

கொத்தமல்லி, கருவேப்பிலை.

 

செய்முறை :

 

1.முதலில் இஞ்சி, பூண்டு, தனியா, கசகசா, சோம்பு ஆகியவற்றை நன்றாக வதக்கி மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும். பிறகு தேங்காய், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை வறுத்து அரைத்து எடுத்து கொள்ளவும்.கேரட்டை நன்றாக துருவிக் கொள்ளவும். 

 

2.முட்டையை நன்றாக அடித்து அத்துடன் உப்பு, கேரட் துருவல், பொட்டு கடலை மாவு எடுத்து அத்துடன் அரைத்த மிளகாய் விழுது இவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். சிறு சிறு கிண்ணங்களில் நெய் தடவி அதில் ஊற்றி ஆவியில் வேக வைக்கவும்.ஆறிய பின் தனியாக கிண்ணத்திலிருந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். 

3.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயத்தை போட்டு சிவக்க வறுக்கவும்.இதனுடன் அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள் போட்டு 2 கப் தண்ணீர் விட்டு சிறிது நேரம் கொதிக்க விடவும். 

 

4.இந்த கலவையை ஒரு அகல பாத்திரத்தில் கொட்டி இதனுடன் கட்லட்களை போட்டு சிறிது நேரம் ஊறவிடவும்.சூடு ஆறிய பின் கட்லெட் எடுத்து தனியாக தட்டில் வைத்து அதன் மீது கொத்தமல்லி தழையை தூவி பரிமாறவும்.

Cutlet Curry

Ingredients for Cutlet Curry:

 

Egg-6

Large Carrot-1

Roasted Gram Powder-1/2 Cup

Coconut-1 Cup

Large Onion-2

Tomato-3

Chilly-6

Ginger-Little

Fennel-1 Tsp

Coriander-2 Tsp

Poppy Seed-2 Tsp

Garlic-8

Cumin-2 Tsp

Coriander Leaves, Curry Leaves

 

Procedure to make Cutlet Curry:

 

1. Fry ginger, garlic, coriander, poppy seeds and fennel and then grind them well. Fry and grind the coconut, tomato and chilly. Make grated carrot from carrot.

2. Beat the eggs and mix together with salt, grated carrot, roasted gram powder and ground chilly paste. Add ghee in a small cups and pour the masala and allow to boil and then set aside the cutlets from the cups.

3. Heat oil in a pan, add cumin, ginger, garlic paste and saute well. Then add chopped onion and fry till get golden color. Then add ground paste, salt, turmeric powder and 2 cup of water and let to boil.

4. Pour this mixure in a wide vessel and add cutlet pieces and let to soak for a while. Allow to cool and then put the cutlet pieces on a plate and garnish with coriander leaves.

 

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!