Home  |  அறுசுவை

காராமணி குழம்பு(Cow Beans Curry)

தேவையானவை:

 

காராமணி - 3/4 கப்,

கத்திரிக்காய் - 2,

தேங்காய் துண்டுகள் - 2,

சீரகம் - 1 1/2 டீஸ்பூன்,

தனியாத்தூள் - 2 டீஸ்பூன்,

கறிவேப்பிலை - சிறிதளவு,

எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,

வெங் காயம்,தக்காளி - தலா 1, 

கீறிய பச்சை மிளகாய் - 1

பூண்டு - 2 பல்,

புளி - நெல்லிக்காய் அளவு,

மிளகாய்த்தூள் - தேவையான அளவு.

உப்பு - தேவையான அளவு.

கடுகு, உளுத்தம்பருப்பு, மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன்,

 

செய்முறை:

 

1.ஒரு குக்கரில் காராமணியை வறுத்து போட்டு, தண்ணீர் விட்டு ஐந்து விசில் வரும்வரை வேக வைக்கவும். தேங்காய், சீரகத்தை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

2.வாணலியில் எண்ணெய் விட்டு. நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி, கத்திரிக்காய், கீறிய பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும். மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து வதக்கி, அரைத்த தேங்காய் - சீரக விழுதைப் போட்டு, புளியைக் கரைத்து ஊற்றவும்.

3.கலவை ஒரு கொதி வந்ததும், வேக வைத்த காராமணியை சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்துக் குழம்பில் கொட்டி, கத்திரிக்காய் வெந்ததும் இறக்கவும்.சுவையான காராமணி குழம்பு ரெடி!

Cow Beans Curry

Ingredients for Cow Beans Curry:

 

Cow Beans-3/4 cup,

Brinjal-2,

Coconut Piece-2,

Cumin-1 1/2 Tsp,

Coriander Powder-2 Tsp,

Curry Leaves-Little,

Oil-1 Tbsp,

Onion, Tomato-Each 1,

Peeled Green Chilly-1,

Garlic-2 Flakes,

Tamarind-Gosseberry Size,

Chilly Powder-as Needed,

Salt-as Needed,

Mustard, Black Gram, Turmeric powder- Each 1/2 Tsp.

 

Procedure to make Cow Beans Curry:

 

1. In a cooker, add cow beans and fry for a while and then add water and allow 5 whistles to boil. Grind coconut along with cumin.

2. Heat oil in a pan, add chopped onion, garlic, tomato, brinjal, peeled green chilly and fry well. Then add turmeric powder, chilly powder, coriander powder, salt and fry for a while and then add ground paste and tamarind juice.

3. When the curry starts to boil, add boiled cow beans and let to boil well. Heat oil in a pan, add mustard, black gram, curry leaves and let to splutter and add into curry. When the brinjal boiled well, remove from flame. Tasty cow beans curry is ready to serve.

 

 

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!