Home  |  அறுசுவை

வெங்காய வற்றல் குழம்பு (onion chilli gravy)

தேவையானவை :

 

சின்ன வெங்காயம் - 150 கிராம்

மிளகாய் பொடி - 2 ஸ்பூன்

வெந்தயம் - அரை ஸ்பூன்

கடுகு - அரை ஸ்பூன்

புளி - ஒரு  எலுமிச்சை அளவு

உப்பு- தேவையான அளவு

எண்ணெய் - 4 ஸ்பூன்

தனியா பொடி - 3 ஸ்பூன்

மஞ்சள் பொடி - சிறிதளவு

பெருங்காயப்பொடி - சிறிதளவு

பச்சை மிளகாய் - 2

மிளகாய் வற்றல் - 3

 

செய்முறை:

 

1.இரண்டு கிளாஸ் தண்ணீரில் புளியை  ஊற வைத்துக் கரைத்து வடிகட்டவும். வெங்காயத்தை உரித்து முழுதாக வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும்.கரைத்த புளியில் மிளகாய் பொடி, தனியா பொடி, பெருங்காயப்பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும்.

 

2.ஒரு வாணலியில் எண்ணெயில் வெந்தயம், கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் சேர்த்துத் தாளித்து அதில் உரித்த வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி குழம்பை சேர்த்துக் கொதித்த பின் இறக்கி கொத்தமல்லி சேர்க்கவும்.சுவையான வெங்காய வற்றல் குழம்பு தயார். 

Onion Chilli Gravy

Ingredients for Onion Chilli Gravy:

 

Small Onion-150 g

Chilly Powder-2 Tsp

Fenugreek-1/2 Tsp

Mustard-1/2 Tsp

Tamarind-Lemon size

Salt-as Needed

Oil-4 Tsp

Coriander Powder-3 Tsp

Turmeric Powder-Little

Asafoetida-Little

Green Chilly-2

Dry Chilly-3

 

Procedure to make Onion Chilli Gravy:

 

1. Soak the tamarind in 2 cup of water and extract the juice. Remove the skin of onion and keep aside. Peel the green chilly in to half. Mix the tamarind juice along with chilly powder, coriander powder, asafoetida, turmeric powder and salt.

2. Heat oil in a pan, add fenugreek, mustard, curry leaves, dry chilly and let to splutter and then add onion, green chilly and allow to boil well. Remove from flame and add coriander leaves. Tasty onion chilli gravy is ready.

 

  12 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!