Home  |  அறுசுவை

கத்திரிக்காய் காரக்குழம்பு (Brinjal Spicy Curry)

தேவையானவை :

 

கத்திரிக்காய் - 3 

சாம்பார் வெங்காயம் - 10

கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன் 

காய்ந்த மிளகாய் - 2

கறிவெப்பிலை - ஒரு கொத்து

பெரிய வெங்காயம் - பாதி

சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்

மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்

நல்லெண்ணை - 2 டேபிள்ஸ்பூன்

தக்காளி - 1

தேங்காய் துருவல் - 1 டேபிள்ஸ்பூன்

புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு

உப்பு - 2 டீஸ்பூன் 

கடுகு - 1/2 டீஸ்பூன்

வெந்தயம் - 1/2 டீஸ்பூன்

 

 

செய்முறை:

 

1.ஒரு பாத்திரத்தில் உப்பு, புளி இரண்டையும் ஊறவைத்து, தண்ணீர் சேர்த்து கரைத்து 3 கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.கத்திரிக்காய், தக்காளி, பெரிய வெங்காயம் ஆகியவற்றை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.சாம்பார் வெங்காயத்தை இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.

 

2.ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு, பெரிய வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும். பின்னர் தக்காளித் துண்டுகளைச் சேர்த்து நன்றாக சுருள வதக்கவும். அதில் தேங்காய், சாம்பார் பொடி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். ஆற வைத்து அரைத்து எடுக்கவும்.

3.கடாயில் மீதி எண்ணையை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, வெந்தயம் போட்டு வறுக்கவும். பின் சாம்பார் வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன், கத்திரிக்காய் துண்டுகளை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

4.வதங்கியதும் புளிக்கரைசலை ஊற்றி, மஞ்சள் பொடி சேர்க்கவும். நன்றாகக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்து காய் வெந்தவுடன், அரைத்து வைத்திருக்கும் விழுதை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொதிக்கும் குழம்பில் விடவும். மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

Brinjal Spicy Curry

Ingredients to make Brinjal Spicy Curry:

 

Brinjal-3

Sambar Onion-10

Bengal Gram-1 Tbsp

Dry Chilly-2

Curry Leaves-1 Bunch

Large Onion-Half

Sambar Powder-1 Tbsp

Turmeric Powder-1/2 Tsp

Sesame Oil-2 Tbsp

Tomato-1

Grated Coconut-1 Tbsp

Tamarind-Small Lemon Size

Salt-2 Tsp

Mustard-1/2 Tsp

Fenugreek-1/2 Tsp

 

Procedure to make Brinjal Spicy Curry:

 

1. Soak tamarind along with salt and extract 3 cup of tamarind juice. Chop the brinjals, tomato and large onion.

2. Heat oil in a pan, add large onion and saute well. Then add tomato pieces and fry well. Then add coconut and sambar powder and fry for 2 minutes. Allow to cool and set aside.

3. Heat oil in a pan, add mustard and let to splutter and then add bengal gram, dry chilly, curry leaves and fenugreek. Then add sambar onion and fry well. Then add brinjal pieces and saute for 2 minutes.

4. Then pour tamarind juice and turmeric powder. Allow to boil well. Then add ground paste and water. Allow medium flame for 10 minutes to boil and remove from flame.

 

 

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!