Home  |  அறுசுவை

கத்தரிக்காய் காரக்குழம்பு (Brinjal Spicy Curry)

தேவையானவை :

 

கத்தரிக்காய் - 250 கிராம்

புளி - கைப்பிடி அளவு

மிளகாய் தூள்,தனியா தூள் - 2 டீஸ்பூன்

வெந்தயம் - அரை டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

வெங்காயம் - அரை கப்

தக்காளி - கால் கப்

பூண்டு பல் - சிறிதளவு

 

அரைப்பதற்கு தேவையானவை :

 

தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்

தக்காளி - 1

 

தாளிக்க தேவையானவை :

 

நல்லெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

துவரம் பருப்பு - அரை டீஸ்பூன்

வெந்தயம் - அரை டீஸ்பூன்

பெருங்காயம் - தேவையான அளவு

கறிவேப்பிலை - ஒரு துணுக்கு

 

செய்முறை:

 

1.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும், தாளிக்க கொடுத்துள்ளவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும். பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு தக்காளி சேர்த்து நன்கு குழையும் வரை வதக்க வேண்டும். 

2.தக்காளிக்கு பின் கத்தரிக்காயை நான்காக அரிந்து  சேர்த்து வதக்க வேண்டும். சாம்பார் பொடி சேர்த்து ஒரு முறை பிரட்டி புளி தண்ணீர் சேர்க்க வேண்டும்.தேங்காய் மற்றும் தக்காளியை மிக்ஸ்சியில் அரைத்து கொதிக்கும் குழம்பில் ஊற்ற வேண்டும். கடைசியாக உப்பு மற்றும் அரை டீஸ்பூன் வெந்தயத்தை பொடி செய்து குழம்பில் கொட்டி கொதிக்க விட வேண்டும். காய்கறிகள் வெந்து எண்ணெய் மேலே மிதந்ததும் அடுப்பிலிருந்து இறக்க வேண்டும்.

Brinjal Spicy Curry

Ingredients for Brinjal Spicy Curry:

 

Brinjal-250 G

Tamarind-Hand Pinch

Chilly Powder, Coriander Powder-2 Tsp

Fenugreek-1/2 Tsp

Salt-as Needed

Onion-1/2 Cup

Tomato-1/4 Cup

Garlic-Little

 

Ingredients for Grinding:

 

Coconut-2 Tbsp

Tomato-1

 

Ingredients for Tempering:

 

Sesame Oil-1 Tbsp

Mustard-1/2 Tsp

Red Gram-1/2 Tsp

Fenugreek-1/2 Tsp

Asafoetida-as Needed

Curry Leaves-1 Bunch

 

Procedure to make Brinjal Spicy Curry:

 

1. Heat oil in apan, add seasoning ingredients and let to splutter. Then add garlic, onion and fry well. Then add tomato and saute well.

2. Then add chopped brinjal and fry well. Add sambar powder and fry for a while and then add tamarind juice. Grind coconut and tomato and put in to sambar. Finally add salt and 1/2 tea spoon of fenugreek powder and let to boil. When oil floats on top, remove from flame.

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!