Home  |  அறுசுவை

பாகற்காய் குழம்பு (Bitter Gourd Curry)

தேவையானவை :

 

பாகற்காய் - 350 கிராம்

மிளகாய் - 10

மிளகு - 1 டீஸ் ஸ்பூன்

அரிசி மாவு - 1 டீஸ் ஸ்பூன்

கொத்தமல்லி விதை -  4 டீஸ் ஸ்பூன்

கடலைப்பருப்பு -  4 டீஸ் ஸ்பூன்

தேங்காய் - 1

துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

பெருங்காயம் - சிறு துண்டு

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

புளி - கைப்பிடி அளவு

மஞ்சள் பொடி - 3 டீஸ் ஸ்பூன்

வெல்லம் - அரை அச்சு

கறிவேப்பிலை, உப்பு, கடுகு - தேவைகேற்ப

 

செய்முறை:

 

1.ஒரு பாத்திரத்தில் புளியை நன்றாக கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பாகற்காயை கழுவி நறுக்கி  கொள்ள வேண்டும். அதனுடன் இரண்டு ஸ்பூன் புளிக் கரைசலைச் சேர்த்து, கொஞ்சம் நீர் விட்டு, வெல்லம், மஞ்சள் பொடி, உப்பு ஆகியவற்றைக் கலந்து பாத்திரத்தில் வேக வைக்க வேண்டும். துவரம் பருப்பையும், கொஞ்சம் கடலைப் பருப்பையும் தனியாக வேக வைத்துக் கொள்ள வேண்டும். 

2.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, மிளகு, கடலைப்பருப்பு, கொத்துமல்லி விதை, தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து சிவக்கும் வரை வறுக்க வேண்டும். பின்பு அதனுடன் பெருங்காயத்தையும் பொரித்துக் கொண்டு, எல்லாவற்றையும் மிக்ஸியில் வைத்து அரைக்க வேண்டும். பாகற்காய் வெந்ததும் மீதமுள்ள புளிக்கரைசலையும் சேர்த்து கொதிக்க விட வேண்டும். 

3.கலவை நன்கு கொதித்ததும், அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டுக் கலக்கி, அதில் வேக வைத்த பருப்புகளைக் கொட்ட வேண்டும். அதனுடன் மிளகாய், கடுகு ஆகியவற்றைப் போட்டுத் தாளித்து, மாவைக் கரைத்து ஊற்றி சில நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். பின்பு கறிவேப்பிலையைக் கிள்ளிப் போட்டு இறக்கி வைத்தால் பாகற்காய் குழம்பு தயார். 

Bitter Gourd Curry

Ingredients for Bitter Gourd Curry:

 

Bitter Gourd-300 G

Chilly-10

Pepper-1 Tsp

Rice Flour-1 Tsp

Coriander Seeds-4 Tsp

Bengal Gram-4

Coconut-1

Red Gram-2 Tbsp

Asafoetida-Small Piece

Oil-2 Tbsp

Tamarind-Hand Pinch

Turmeric Powder-3 Tsp

Jaggery-half Piece

Curry Leaves, Salt, Mustard- ad Needed

 

Procedure to make Bitter Gourd Curry:

 

1. In a vessel, mix the tamarind in water. Wash the bitter gourd and chop into small pieces. Add 2 tea spoons of tamarind juice, water, jaggery, turmeric powder and salt together with vegetables and boil them. Boil the red gram and bengal gram seperately.

2. Heat oil in a pan, add pepper, bengal gram, coriander seeds, asafoetida and fry till get golden color and then grind them finely. When bitter gourd boiled well, add the remaining tamarind juice and allow to boil well.

3. Then add grinded paste and boiled dhals. Season the chilly and mustard. Then pour the rice flour and let to boil for few minutes. Finally garnish with curry leaves and remove from flame. Bitter gourd curry is ready to taste.

 

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!