Home  |  அறுசுவை

பேபிகார்ன் வேர்க்கடலைக் காரக்குழம்பு (Baby Corn Peanut Chili Curry)

தேவையானவை :

 

பேபிகார்ன் - 10

வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி தழை - ஒரு பிடி

பூண்டு - 4 பல்

புளி - எலுமிச்சை அளவு

பச்சைமிளகாய் - 2

தக்காளி - ஒன்று (பொடித்தது)

உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை - சிறிது

வெங்காயம் - ஒன்று (பொடித்தது)

சாம்பார்பொடி - 2 டீஸ்பூன்

நல்லெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

அரிசி ஊறிய நீர் - 1 கப் 

தேங்காய்ப்பால் - 1/2 கப்

 

செய்முறை :

 

1.முதலில் சாம்பார் தூளை தக்காளியுடன் சேர்த்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும். அரிசி ஊற வைத்த நீரில் புளியை போட்டு கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளவும். பேபி கார்னை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2.ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.பிறகு வேர்க்கடலை மற்றும் நறுக்கின பேபி கார்ன் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.அதன் பின்னர் அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதினை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.எல்லாவற்றையும் சேர்த்து வதக்கிய பின்னர் புளிக்கரைசலை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.

3.குழம்பு கெட்டியாகி எண்ணெய் மேலே மிதக்கும் போது தேங்காய்ப்பாலை ஊற்றி கிளறி விடவும்.ஒரு கொதி கொதித்ததும் நறுக்கின கொத்தமல்லித்தழை தூவி இறக்கி விடவும்.

Baby Corn Peanut Chili Curry

Ingredients for Baby Corn Peanut Chili Curry:

 

Baby Corn-10

Peanut-2 Tbsp

Coriander Leaves-Hand Pinch

Garlic-4 Flakes

Tamarind-Lemon Size

Green Chilly-2

Tomato-1 (Chopped)

Salt-as Needed

Curry Leaves-Little

Onion-1 (Chopped)

Sambar Powder-2 Tbsp

Sesame Oil-1 Tbsp

Soaked Rice Water-1 Cup

Coconut Milk-1/2 Cup

 

Procedure to make Baby Corn Peanut Chili Curry:

 

1. Grind the tomato along with sambar powder coarsely. Mix the tamarind in soaked rice water. Cut the baby corn in to small pieces.

2. In a deep pan, add oil, mustard, curry leaves and let to splutter. Then add onion, garlic and green chilly one by one and saute well. Now add peanut and baby corn pieces and fry well. Then add grinded tomato paste and saute for a while. Finally add tamarind juice and salt and let to boil.

3. When oil floats on top, add coconut milk and stir well. Allow boil for a while, garnish with coriander leaves and remove from flame.

 

 

 

 

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!