Home  |  ஆரோக்கியம்

வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா !!

வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா !!

 


இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட வெள்ளரி பண்டைக்காலம் முதல் சாகுபடி செய்யப்படுகிறது.

 


நமது இந்தியாவில் இருந்து கிரேக்கர்கள், ரோமானியர்கள் மூலம் ஐரோப்பாவிற்கு பரவிய வெள்ளரி, உலகம் முழுவதும் பரவி உலகக் காய்கறி சாகுபடி பரப்பளவில் நான்காவது இடத்தை வகிக்கிறது.

 


வெள்ளரி உலகம் முழுவதும் விரும்பி உண்ணப்படுவதற்கு காரணம் அதன் மருத்துவக் குணங்களாகும்.

 


முகத்தில் உள்ள கரும் புள்ளிகள்,வறண்ட தோல், பருக்கள் முதலியவை குணமாக
வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில்பூசவேண்டும். பதினைந்து நிமிடங்கள்
முகத்தில் இந்தப் பூச்சு இருக்கவேண்டும். தொடர்ந்து இந்த முறையில் பூசினால்
முகம் அழகு பெறும். பெண்கள் இந்த முறையைத் தினசரி பின்பற்றலாம்.

 

 

இதில் உயர்தரமான புரதம், கொழுப்பு,மாவுச்சத்து, தாது உப்புகள்,
கால்சியம்,பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் ‘பி’ஆகியவை அமைந்துள்ளன;
வைட்டமின்‘சி’யும் சிறிதளவுஉண்டு.

 


வறண்ட தோல், காய்ந்து விட்ட முகம் உள்ளவர்கள், வெள்ளரிக்காய் சீசனில்
தினமும் வெள்ளரிக்காய்ச் சாறு சாப்பிட்டு வறட்சித் தன்மையைப் போக்கலாம்.
இதில் உள்ள சுண்ணாம்புச் சத்து இரத்தக் குழாய்களைத் தளர்த்தி உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க வல்லது.

 

 

வெள்ளரிக்காய், குளிர்ச்சியானது. அப்படியே உண்ணத்தூண்டும் அளவுக்குத் தனிச் சுவையுடையது.
நன்கு செரிமானம் ஆகக்கூடியது. சிறுநீர்ப் பிரிவைத் தூண்டச் செய்வது, இரைப்பையில் ஏற்படும் புண்ணையும் மலச்சிக்கலையும் குணப்படுத்தக்கூடியது.

 


காய்கறிகளுள்ளே குறைவான கலோரி அளவைக் கொண்டிருப்பது வெள்ளரிக்காய்தான். 100 கிராம் வெள்ளரிக்காயில் கிடைக்கும்கலோரி பபதினெட்டு .இளநீருக்கு வெள்ளரிக்காய்ச் சாறு திகழ்கிறது.

 


வெள்ளரி பித்தநீர், சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்குவதில் சிறந்து விளங்குகிறது. மேலும் இது நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் மனித ஆற்றலையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ச்செய்யும்.

 


வெள்ளரியைச் சமைத்துச்சாப்பிடும் போது பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய உப்புகள் அழிந்து விடுகின்றன. எனவே வெள்ளரிச்சாறுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

 

 


வயிற்றுப்புண் உள்ளவர்கள் இரண்டுமணி நேரத்திற்கு ஒரு தடவை ஆறு அவுன்ஸ் வீதம் வெள்ளரிச் சாறு அருந்தினால் வயிறு புண் குணமாகும்.

 

 

காலராநோயாளிகள் வெள்ளரிக்கொடியின் இளந்தளிர்களை ரசமாக்கி, அதனுடன்
இளநீரையும் கலந்து, ஒருமணிக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் அருந்த வேண்டும்.

 


தினமும் மிகச்சிறந்த சத்துணவு போல் சாப்பிடத் தயிரில் வெள்ளரிக் காய்த்துண்டுகளை நறுக்கிப் போடவும்.அத்துடன் காரட், பீட்ரூட், தக்காளி,முள்ளங்கி ஆகியவற்றின் சிறிய துண்டுகளையும போட்டுவைத்து வெஜிடேபிள் சாலட் போல் பரிமாற வேண்டும். அது இல்லத்தில் உள்ள அனைவருக்கும் சத்துணவு கிடைக்கச் செய்கிறது.

 


மலச்சிக்கலுக்காகச் சிலர் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவார்கள். அதற்குப்பதிலாகத் தினசரி இரண்டு வெள்ளரிக்காய்களைச் சாப்பிட்டால் மலச்சிக்கலின்றி எப்போதும் குடல் சுத்தமாய் இருக்கும்.

 


நீரிழிவு நோயாளிகள் எடை குறைய விதையுடன் சேர்த்தே வெள்ளரிக்காய் சாற்றை அருந்த வேண்டும். சிறிய வெள்ளரிக் காய் என்றாலும் பெரியவகை வெள்ளரிக்காய் என்றாலும், அதை விதையுடன் தான் அரைத்துச் சாறு அருந்தவேண்டும். இதனால் ஆண்மை பெருகும்.


முடிவளர்ச்சிக்கு குறிப்பாகப் பெண்கள் வெள்ளரிச் சாற்றை அருந்த வேண்டும்.வெள்ளரியில் உள்ள உயர் தரமான சிலிகானும், சல்பரும் முடி வளர்ச்சிக்குப் பயன்படுகின்றன. இந்தச் சாற்றுடன் இரு தேக்கரண்டி காரட் சாறு, இரு தேக்கரண்டி பசலைக் கீரைச்சாறு,பச்சடிக் கீரைச் சாறு போன்ற வற்றையும் சேர்த்து அருந்தினால் முடி நன்கு வளரும்.

 


வெள்ளரியில் உள்ள நீர் சத்து நா வரட்சியைப் போக்குவதுடன் பசியை உண்டாக்கும். உடம்புக்குக்
குளிர்ச்சியை உண்டு பண்ணும்.வெள்ளரியில் தாதுப் பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், மற்றும் குளோரின் இதில் உண்டு .இரத்ததில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும்
பொட்டாசியம் அதிகம் உண்டு. ஈரல், கல்லீரல் சூட்டைத் தணிப்பதால் நோய் குணமாகும்.


கபம், இருமல் நுரையீரல் தொல்லையுள்ளவர்கள் வெள்ளரி சாப்பிடுவது நல்லதல்ல.

  06 Apr 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!