Home  |  ஆரோக்கியம்

எண்ணெய் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

எண்ணெய் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

 

* கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளின் அளவை குறைப்பது உடலுக்கு நல்லது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அது சரியல்ல. கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகள் சாப்பிடுவதை குறைப்பதை விட, நல்ல கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாகவும், கெட்ட கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளை குறைவாகவும் சாப்பிடுவதே நல்லது.

 

* எண்ணெய்யை பொறுத்தவரையில் சில சமையல் அறைகளில் ஒவ்வொரு முறையும் புதிய எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான சமையல் அறைகளில், அதிக பணம் கொடுத்து வாங்கிய எண்ணெய்யை ஒரு தடவை பயன்படுத்திவிட்டு கீழே கொட்ட முடியுமா? என்று பணத்தை மனதில் வைத்துக் கொண்டு திரும்பத் திரும்ப ஒரே எண்ணெய்யை மூன்று, நான்கு முறை கூட பயன்படுத்துகிறார்கள். இன்னும் சில வீடுகளில் உபயோகப்படுத்திய எண்ணெய்யுடன், புது எண்ணெய்யை சேர்த்து பயன்படுத்துகிறார்கள்.

 

* அவர்களுக்கெல்லாம் பதில் ஒன்று தான். எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒரு முறை உபயோகப்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தாதீர்கள்.

* கொதிக்கும் எண்ணெயில் உணவுப் பொருட்களைப் போட்டு பொரித்தெடுப்பதை நாம் "டீப் ஃப்ரை" என்று சொல்வோம். இந்த மாதிரியான பொருட்களை எண்ணெய்யில் போட்டவுடன் அவற்றில் இருக்கும் தண்ணீர்தன்மை, புரதம், கார்போஹைட்ரேட் முழுமையாக வெளியேற ஆரம்பிக்கும். அப்படி தண்ணீர் வெளியேற வெளியேற பொரித்தெடுக்கும் பொருள் ''கற கற முறு முறுவென்று" நல்ல சுவையாக இருக்கும். 

 

* பார்த்தீர்களா சத்துக்கள் போகப்போகத் தான் நிறமும் மாறும், சுவையும் கூடும். அதிக சுவை ஆரோக்கியத்தின் எதிரி என்பதை இப்போதாவது தெரிந்துக் கொள்ளுங்கள். 

 

* எண்ணெய்யை புகை வரும் அளவுக்கு கொதிக்கவிடக்கூடாது. ஏனெனில், அந்த புகை நச்சுத்தன்மை கொண்டது. எனவே, எண்ணெய்யை குறிப்பிட்ட அளவுக்குத் தான் சூடு பண்ண வேண்டும், கொதிக்க கொதிக்க சூடு பண்ணக்கூடாது.

 

* எண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்தும் போது 375 பாரன்ஹீட்டுக்கு மேல் போகாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இந்த சூட்டிலேயே வறுக்கவும், பொரிக்கவும் முடியும். (எண்ணெய்யின் சூட்டை அளப்பதற்கான தெர்மா மீட்டர் இருக்கிறது. ஒன்றை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள்)

  02 Mar 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!