Home  |  அறுசுவை

கலர்புல் பிரியாணி சோறு(Colorful Biryani Rice)

தேவையானவை :

 

பாசுமதி அரிசி - அரை கிலோ

பெரிய காரட் - 1

உப்பு - தேவையான அளவு

ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை

மல்லி இலை - 1 கைப்பிடி 

பெரிய உருழைக்கிழங்கு - 1

சிறிய இறால் - 200 கிராம்

மஞ்சள் பொடி - அரை டீஸ் ஸ்பூன் 

பெரிய வெங்காயம் - 1

பச்சை பட்டாணி - 100 கிராம்

கயூ - 5

பிளம்ஸ் - 5

பட்டர் - பொரிப்பதற்கு

 

 

செய்முறை :

 

1.முதலில் ஒரு பாத்திரத்தில் பசுமதி அரிசியை கழுவி 1/4 டீஸ் ஸ்பூன்  மஞ்சள்,சிறிது உப்பு போட்டு அவிய வைக்கவும்.சூடு ஆற முன் ஏலக்காய் பொடி போட்டு கிளறி விடவும்.

 

2.சாதத்தை சூடு ஆறாமல் மூடி வைக்கவும்.காரட், உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றை சிறிய சதுரம், சதுரமாக வெட்டி வேறு வேறாக சிறிது உப்பு சேர்த்து வைக்கவும்.

 

3.சுத்தம் செய்த இறாலை கால் டீஸ் ஸ்பூன் மஞ்சள்,உப்பு போட்டு பிரட்டி வைக்கவும்.கயூவை சிறு சிறு துண்டங்களாக உடைத்து வைக்கவும்.வாணலியை அடுப்பில் வைத்து பட்டர் சூடாகியதும் முதலில் இறாலை பொரித்து எடுக்கவும்.

 

4.மீண்டும் அதே வாணலியில் காரட், உருளைகிழங்கு, வெங்காயம், பச்சை பட்டாணி ஆகியவற்றையும் பொரித்து எடுத்து வைக்கவும்.கயூ, பிளம்ஸ் என்பவற்றையும் சிறிது நேரம் சூடான நெய்யில் போட்டு எடுக்கவும்.

 

5.கடைசியாக சூடாக உள்ள சாதத்தினுள், பொரித்து வைத்த எல்லாவற்றையும் கலந்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!