Home  |  அறுசுவை

கறிச் சுண்டைக்காய் பச்சடி

தேவையானவை :

 

பிஞ்சு சுண்டைக்காய் - 1/2 கப்

துவரம்பருப்பு - 1/2 கப்

பெரிய வெங்காயம் - ஒன்று

தக்காளி - 2

பச்சைமிளகாய் - 4

புளி - நெல்லிக்காய் அளவு

கடுகு - 1/2 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்

சோம்பு - 1/2 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - சிறிதளவு

பெருங்காயத்தூள் - சிறிதளவு

எண்ணெய் - தாளிக்க

 

செய்முறை :

 

1. துவரம் பருப்பை சிறிது பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

2. புளியை தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

3. வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி, பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.

4. சுண்டைக்காயை இரண்டிரண்டாக நறுக்கவும். அல்லது அம்மியில் வைத்து தட்டிக் கொள்ளவும்.

5. வாணலியில் சிறிது எண்ணெயை காய வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு, பெருங்காயம் போட்டு தாளிக்கவும்.

6. தொடர்ந்து வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் சுண்டைக்காயை சேர்த்து வதக்கி அடுப்பை சிம்மில் வைத்து மூடி இரண்டு நிமிடம் வேக விடவும்.

7. சுண்டைக்காய் வெந்ததும், தக்காளி, உப்பு, புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

8. பச்சை வாசனை போனதும் வெந்த துவரம் பருப்பைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும். பச்சடி ரெடி.

Curry Turkey Berry

Ingredients for Curry Turkey Berry : 


Turkey Berry - 1 /2 Cup,

Split Gram - 1 /2 Cup,

Onion - 1(Big),

Tomato - 2,

Green Chilies - 4, 

Tamarind - a small size,

Mustard - 1 /2 Tsp,

Urad Dal - 1 /2 Tsp,

Aniseeds - 1 /2 Tsp,

Turmeric powder - Little,

Asafoetida - Little,

Oil - as needed.


Method to make Curry Turkey Berry :


1. Boil the spilt gram with water and add asafoetida and turmeric powder. Keep it aside. 

2. Soak the tamarind and smash it and filter it well.

3. Chop the onions, tomatoes and green chillies finely.

4. Chop the Turkey Berry into two pieces. 

5. heat Oil in a frying pan then add mustards, urad dal, aniseeds, asafoetida. Season these ingredients well. 

6. Then Add chopped onions, tomatoes and green chilies. Fry them well. Then add chopped turkey berry. And allow it to boil for 2 minutes. 

7. When it green smells out add the boiled split paste along with them and allow it to boil for few minutes. 



  06 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!