Home  |  ஆன்மிகம்

சித்ரா பௌர்ணமியும் - சித்ர குப்த வழிபாடும் !!

சித்ரா பௌர்ணமியும்  - சித்ர குப்த வழிபாடும் !!

 

சித்திரை மாதம் வரும் பௌர்ணமிக்கு சில தனிச் சிறப்புக்கள் உண்டு . மாதம் தோறும் வரும்பௌர்ணமி நாளில் மலைக்கோவில்களுக்குச் சென்று மக்கள் கிரிவலம் வருவர் எனினும் சித்திரைப் பௌர்ணமியன்று கிரிவலம் வருதல் கோவில்களிலும் புனிதத்தலங்கலுக்கு தம் குடும்பத்தாருடன் சென்று பொங்கல் வைத்தல் போன்றன சிறப்பானவையாகும்.

 

உலக அன்னை பார்வதிதேவி தன் கைதிறமையால் அழகான குழந்தை ஒவியத்தை வரைந்தார். அந்த ஓவியம் சாதராண ஓவியமாக இல்லாமல் நிஜ குழந்தை போல தத்ரூபமாக இருந்ததை கண்ட சிவபெருமான்,

 

பார்வதியிடம், நீ வரைந்த இந்த ஓவியத்திற்கு உயிர் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று கூறி கொண்டே தன் கைகளால் அந்த ஓவியத்தை எடுத்து தன்னுடைய மூச்சிகாற்றை அந்த ஒவியத்தின் மேல் பதித்தார். ஈசனின் மூச்சி காற்று காற்று சில்லென்று ஓவியத்தில் பட்டஉடன், அந்த ஓவியத்தில் இருந்த குழந்தை உயிர் பெற்று சிரிக்க ஆரம்பித்து ஒரு அழகான குழந்தையாக வெளிவந்தது.


இந்த அற்புதத்தை கண்ட பார்வதிதேவி மிகவும் மகிழ்ச்சியடைந்து - நான் வரைந்த குழந்தை ஒவியம், ஒரு நிஜ குழந்தையாக மாறியதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன். நான் வரைந்த சித்திரம் குழந்தையாக மாறியதால் இந்த குழந்தையை இன்று முதல் சித்திர குப்தன் என அழைக்கபடட்டும் என்று ஆசி வழங்கினார்.

 


சித்திரைப் பௌர்ணமியானது, சித்திரகுப்தனாரின் திருமண நாளாகும். அவர் நமதுபிறப்பு, இறப்பு கணக்குகளைப் பார்த்துவரும் எமதர்மனின் கணக்குப்பிள்ளை ஆவார். பூமியில் மனிதர்கள் செய்யும் பாவ,புண்ணியங்களைக் கணக்கெடுத்து

 

அவைகளுக்குத் தகுந்தால் போல் நமக்குரிய சொர்க்க, நரகங்களை முடிவு செய்வதே சித்திர குப்தனின் கடமையாகும். எனவே அவரது திருமண நாளான சித்திரா பௌர்ணமியன்று பொங்கலிட்டும் கிரிவலம் வந்தும் இறைவனை வழிபடும்போது,

 


சித்திர குப்தனை மனதில் நினைத்து நாங்கள் மலையளவு செய்த பாவங்களை கடுகளவாகவும் கடுகளவு செய்த புண்ணியத்தை மலையளவாகவும் எழுதிக்கொள் என வேண்டி வழிபட வேண்டும்.


சித்திரகுப்தருக்கு பிரியமானவையாக சித்ரான்னம், தயிர் சாதம், தேங்காய் சாதம், உளுந்து வடை ஆகியவற்றை நிவேதனம் செய்ய வேண்டும்.

 

கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி சித்ரகுப்தனைத் தியானிக்க வேண்டும்.

"சித்திர குப்தம் மஹா ப்ராக்ஞம்
லேகனிபத்ர தாரிணம்
சித்ர ரத்னாம்பரதரம்
மத்யஸ்தம் ஸர்வதேஹினாம்''


என்ன கதை சொன்னாலும் உலகம் காக்கும் பரமசிவனின் படைப்பில் வந்த சித்ர குப்தனை இந்த சித்ரா பௌர்ணமி நன்னாளில்
வணங்கி நம் நன்மைகளை அதிகரித்து கொண்டு தீமைகளை திரித்து கொண்டும் மகிழ்ச்சியாக வாழ்வோம் .

  16 Apr 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!